ஆடாசோரஸ்
புதைப்படிவ காலம்:பிந்திய கிரீத்தேசியக் காலம்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: சோரொப்சிடா
பெருவரிசை: டயனோசோரியா
வரிசை: சோரிஸ்ச்சியா
துணைவரிசை: தேரோப்போடா
உள்வரிசை: கோலுரோசோரியா
குடும்பம்: டிரோமியோசோரிடீ
துணைக்குடும்பம்: டிரோமியோசோரிடீ
பேரினம்: ஆடாசோரஸ்
பார்ஸ்பால்ட், 1983
இனங்கள்
  • ஆ. மங்கோலியென்சிஸ்
    பார்ஸ்பால்ட், 1983

'ஆடாசோரஸ் (உச்சரிப்பு /ˌɑːdəˈsɔrəs/ (AH-dah-SAWR-us); "ஆடாவின் பல்லி") என்பது, டிரோமியோசோரிட் தேரோப்போட் தொன்மாப் பேரினத்தைக் குறிக்கும். இது, இன்றைய மத்திய ஆசியாவின் கிரீத்தேசியக் காலத்தைச் சேர்ந்தது. இது இதன் பின்னங்கால்களில் அரிவாள் வடிவிலான வளைந்த நகங்களுடன் கூடிய ஒரு சிறிய இருகாலி, ஊனுண்ணி ஆகும். ஒரு வளர்ந்த விலங்கு 2.5 மீட்டர் (8 அடி) நீளம் இருக்கக்கூடும்.

மங்கோலியாவின் தேசியப் பழங்கதைகளில் ஆடா என்பது ஒரு தீய ஆவியாகும். இச் சொல்லுடன் பல்லி என்னும் பொருள் கொண்ட கிரேக்கச் சொல்லான சோரஸ் என்பதையும் சேர்த்து இதற்குப் பெயரிடப்பட்டு உள்ளது. இந்தப் பேரினத்திலுள்ள ஒரே இனமான ஆ. மங்கோலியென்சிஸ் என்பதற்கு அது கண்டுபிடிக்கப்பட்ட இடமான மங்கோலியாவின் பெயர் வழங்கப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடாசோரஸ்&oldid=2741919" இலிருந்து மீள்விக்கப்பட்டது