ஆட்-தின் மகளிர் மருத்துவக் கல்லூரி
ஆட்-தின் மகளிர் மருத்துவக் கல்லூரி (Ad-din Women's Medical College)(வங்க மொழி:আদ-দ্বীন মহিলা মেডিকেল কলেজ) என்பது வங்காளதேசத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி ஆகும். இது பெண் மாணவர்களுக்காக மட்டுமே செயல்படும் மருத்துவக் கல்லூரி ஆகும். இக்கல்லூரி 2008ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. வங்கதேசத் தலைநகர் டாக்காவின் மக்பஜாரில் இக்கல்லூரி அமைந்துள்ளது. இது தாக்கா பல்கலைக்கழகத்துடன் இணைவுப்பெற்றக் கல்லூரியகச் செயல்படுகின்றது.
আদ-দ্বীন মহিলা মেডিকেল কলেজ | |
வகை | தனியார், மகளிர், மருத்துவக் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 2008 |
Academic affiliation | தாக்கா பல்கலைக்கழகம் |
தலைவர் | ரஃபிக்-உல் ஹக் |
முதல்வர் | பேராசிரியர் மருத்துவர் ஆஃபிகோர் ரகுமான் |
பட்ட மாணவர்கள் | 75 |
அமைவிடம் | மக்பஜார், தாக்கா , 23°44′55″N 90°24′19″E / 23.7485°N 90.4052°E |
வளாகம் | நகரம் |
மொழி | ஆங்கிலம் |
இணையதளம் | ad-din |
வரலாறு
தொகுஆட்-தின் அறக்கட்டளை என்பது வங்காளதேசத்தில் ஆதரவற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட அரசு சாரா நிறுவனம் ஆகும். இந்த அறக்கட்டளை மகளிர் மருத்துவத்தினை மேம்படுத்த, 2008ஆம் ஆண்டில் ஆட்-தின் மகளிர் மருத்துவக் கல்லூரியை நிறுவியது. இது வங்கதேசத்தில் இயங்கும் நான்கு மருத்துவக் கல்லூரிகளில் முதலாவதாகும்.[1][2]
வளாகம்
தொகுஇக்கல்லூரி தாக்காவின் மக்பஜாரில் 500 படுக்கைகள் கொண்ட ஆட்-டின் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ளது. தாக்கா விமான நிலையத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் இக்கல்லூரி அமைந்துள்ளது. இம்மருத்துவமனை ஆண்கள் மற்றும் பெண்களுக்குச் சிகிச்சை அளிக்கிறது. ஆனால் அதன் நோயாளிகளில் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவார்.[3][4]
நிர்வாகம்
தொகுஇக்கல்லூரி தாக்கா பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரியாகும்.[5][6] இதன் தலைவராக ரஃபிக்-உல் ஹக்கும் முதல்வராகப் பேராசிரியர் மருத்துவர் ஆஃபிகோர் ரகுமானும் உள்ளனர்.[7]
கல்வி
தொகுஆட்-தின் மகளிர் மருத்துவக் கல்லூரி வங்காளதேசம் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ குழுமத்தினால் அங்கீகரிக்கப்பட்டது. ஐந்து ஆண்டு மருத்துவப் படிப்பை இக்கல்லூரி வழங்குகிறது. இக்கல்லூரி டாக்கா பல்கலைக்கழகத்தில் இளங்கலை மருத்துவம், இளங்கலை அறுவை சிகிச்சை (எம். பி. பி. எஸ்.) பட்டம் பெற வழிவகுக்கிறது. இறுதி தொழில்முறை தேர்வில் தேர்ச்சி பெற்ற மருத்துவ மாணவருக்கு ஓராண்டு கட்டாய வேலைவாய்ப்பும் வழங்கப்படுகிறது. மருத்துவ பயிற்சி பெற மருத்துவக் குழுமத்தில் பதிவு பெறுவதற்கு மருத்துவ பயிற்சி என்பது நிபந்தனையாக உள்ளது[5][8] அக்டோபர் 2014இல், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை மற்றும் கல்விக் கட்டணத்தை 1,990,000 வங்காளதேச இட்டாக்கா (2014 நிலவரப்படி அமெரிக்க டாலர் 25,750) என ஐந்து வருடப் படிப்புகளுக்கு நிர்ணயம் செய்தது.[9]
இக்கல்லூரியில் பயில மகளிர் மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.[10] வங்காளதேசத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி (அரசு மற்றும் தனியார்) மருத்துவ மாணவர் சேர்க்கையின் மையமாகச் சுகாதார சேவைகள் இயக்குநரகம் செயல்படுகிறது. இது நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடைபெறும் எழுத்துத் தேர்வின் அடிப்படையில் சேர்க்கையினை நடத்துகிறது. இத்தேர்வானது பல விடைகள் கொண்ட வினாக்களின் அடிப்படையில் நடைபெறுகிறது. விண்ணப்பதாரர்கள் இந்த தேர்வின் முதன்மையாகப் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்படுகிறார்கள், இருப்பினும் இரண்டாம் நிலைப் பள்ளி சான்றிதழ் மற்றும் மேல்நிலைப் பள்ளி சான்றிதழ் தரங்களும் சேர்க்கையில் பங்கு வகிக்கின்றன.[11] சுதந்திரப் போராட்ட வீரர்களின் குழந்தைகளுக்கும், பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த மாணவர்களுக்கு 5% இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.[12] ஜூலை 2014 நிலவரப்படி, இக்கல்லூரியில் ஆண்டுதோறும் 75 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.[13]
துறைகள்
தொகுஇக்கல்லூரியில் கீழ்கண்ட மருத்துவம் சார்ந்த துறைகள் அமைந்துள்ளன.
- உடற்கூறியல் துறை
- உடற்செயலியல் துறை
- உயிர்வேதியியல் துறை
- மருத்துவத் துறை
- அறுவை சிகிச்சைத் துறை
- காது, மூக்கு, தொண்டை துறை
- இருதயவியல் துறை
- பல் மருத்துவ துறை.
மேற்கோள்கள்
தொகு- ↑ Mazid, Muhammad Abdul (2012). "Ad-Din Welfare Centre". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
- ↑ "Prospectus 2013–14" (PDF). Ad-din Women's Medical Center. 2013. p. 4. Archived from the original (PDF) on 24 January 2014. பார்க்கப்பட்ட நாள் 3 September 2015.
- ↑ "Prospectus 2013–14" (PDF). Ad-din Women's Medical Center. 2013. p. 11. Archived from the original (PDF) on 24 January 2014. பார்க்கப்பட்ட நாள் 3 September 2015.
- ↑ "Health Bulletin 2014" (PDF). Bureau of Health Education (2nd ed.). Ministry of Health and Family Welfare. December 2014. p. 160. Archived from the original (PDF) on 19 ஜனவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 3 September 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 5.0 5.1 "Ad-din Women's Medical College and Hospital". World Directory of Medical Schools.
- ↑ "List of Constituent Colleges/Institutes under the University of Dhaka". University of Dhaka. Archived from the original on 30 August 2015.
- ↑ "Governing Body". Ad-din Women's Medical College. Archived from the original on 2 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 3 செப்டெம்பர் 2015.
- ↑ "List of Recognized medical and dental colleges". Bangladesh Medical & Dental Council.
- ↑ "Govt to fix maximum fees". New Age (Dhaka). 27 October 2014. http://newagebd.net/61257/govt-to-fix-maximum-fees/.
- ↑ "Prospectus 2013–14" (PDF). Ad-din Women's Medical Center. 2013. p. 14. Archived from the original (PDF) on 24 January 2014. பார்க்கப்பட்ட நாள் 3 September 2015.
- ↑ "Prospectus 2013–14" (PDF). Ad-din Women's Medical Center. 2013. p. 20. Archived from the original (PDF) on 24 January 2014. பார்க்கப்பட்ட நாள் 3 September 2015.
- ↑ "Prospectus 2013–14" (PDF). Ad-din Women's Medical Center. 2013. p. 23. Archived from the original (PDF) on 24 January 2014. பார்க்கப்பட்ட நாள் 3 September 2015.
- ↑ "Health Bulletin 2014" (PDF). Bureau of Health Education (2nd ed.). Ministry of Health and Family Welfare. December 2014. p. 227. Archived from the original (PDF) on 19 ஜனவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 3 September 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)