ஆண்டனி வர்கீஸ்

ஆண்டனி வர்கீஸ் (Antony Varghese) இவர் மலையாளத் திரைப்படங்களில் தோன்றும் ஒரு இந்திய திரைப்பட நடிகராவார். இவர் அங்கமாலி டைரிஸ் என்ற படத்தின் மூலம் 2017ஆம் ஆண்டில் அறிமுகமானார்.[1] இவர் பிரபலமாக பெப்பே என்று அழைக்கப்படுகிறார்.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

ஆன்டணி வர்கீஸ் இந்தியாவின் கேரளாவின் கொச்சியின் அங்கமாலியில் வர்கீஸ் மற்றும் அல்போன்சா ஆகியோருக்குப் பிறந்தார்.

தொழில்

தொகு

லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய அங்கமாலி டைரி என்ற மலையாளத் திரைப்படத்தில் வின்சென்ட் பெப்பே என்ற முக்கிய கதாபாத்திரத்தை சித்தரித்து 2017ஆம் ஆண்டில் அறிமுகமானார். இந்த திரைப்படம் ஒரு மிகப்பெரிய வெற்றியாக இருந்தது. இது இவருக்கு புகழ் பெற்றுத் தந்தது. இவர் இப்போது பெப்பே என்ற திரைப் பெயரால் நன்கு அறியப்படுகிறார். இந்த கதாபாத்திரம் இவருக்கு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளை பெற்றுத் தந்தது.[2] இவரது இரண்டாவது படம் அறிமுக இயக்குநர் டினு பப்பச்சன் இயக்கிய சுவதந்திரியம் அர்த்தராத்திரியில் என்பதாகும். இது கோட்டயம் சார்ந்த த்ரில்லர் படமாகும். லிஜோ ஜோஸுடனான தனது இரண்டாவது படமான ஜல்லிக்கெட்டு என்றப் படத்தில் ஒப்பந்தமானார்

குறிப்புகள்

தொகு
  1. "Antony Varghese of 'Angamaly Diaries' impressed its director through the role in a short film". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 2017-11-10.
  2. Palliyangadi's own Pepe.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டனி_வர்கீஸ்&oldid=3742264" இலிருந்து மீள்விக்கப்பட்டது