ஆண்டர்சன் மூஞ்சூறு

ஆண்டர்சன் மூஞ்சூறு
Anderson's shrew
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
இயுலிபோடைப்ளா
குடும்பம்:
சோரிசிடே
பேரினம்:
சன்கசு
இனம்:
ச. இசுடோலிசுகானசு
இருசொற் பெயரீடு
சன்கசு இசுடோலிசுகானசு
(ஆண்டர்சன், 1877)
ஆண்டர்சன் மூஞ்சூறு பரம்பல்

ஆண்டர்சன் மூஞ்சூறு (Anderson's shrew) (சன்கசு இசுடோலிசுகானசு) என்பது நடுத்தர அளவிலான மூஞ்சூறு ஆகும். இதனுடைய தொண்டை மற்றும் மார்பு பகுதியைச் சுற்றி மஞ்சள் ரோமங்கள் காணப்படும். ஒப்பீட்டளவில் பெரிய காதுகளையும், உடல் நீளத்துடன் ஒப்பிடும் போது 50 - 70% அளவிலான வாலினைக் கொண்டது. ஆண்டர்சன் மூஞ்சூறு பரவலாக இந்தியா, நேபாளம், பாக்கித்தான் மற்றும் வங்காளகளாதேசத்தில், நீர்வளங்களுக்கு அருகிலுள்ள தோட்டங்கள் மற்றும் புல்வெளிகளில் (சிந்து மற்றும் பஞ்சாப் பகுதிகள், இந்தியா), வனத்தோட்டங்களில் (பஞ்சாப்), தூரிகைக் குவியல்களின் கீழும், கல் தளங்களிலும் காணப்படுகிறது. மேலும் கதியாவரில் கற்சுவர்களின் அடிப்பகுதியிலும் (ராபர்ட்ஸ், 1977), மற்றும் பாலைவனம் மற்றும் வறண்ட பகுதிகளிலும் காணப்படுகிறது (ஹட்டரர், 1993). ஆண்டர்சனின் மூஞ்சூறு பெரும்பாலும் இரவாடுதல் பழக்கத்தினையும், தனிமையையும் விரும்புகிறது. இதனுடைய இனப்பெருக்கம் ஆண்டு முழுவதும் நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டர்சன்_மூஞ்சூறு&oldid=3630446" இலிருந்து மீள்விக்கப்பட்டது