ஆண்டிபாக்சோசு தீவு
ஆண்டிபாக்சோசு (Antipaxos) என்பது கிரேக்க நாட்டிலுள்ள ஒரு சிறிய தீவாகும். பாக்சோசு தீவுக்கூட்டத்திற்கு தெற்கில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் 5 சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இத்தீவு அமைந்துள்ளது. மேற்கு கிரேக்கத்தின் கோர்பு பிராந்திய அலகிலுள்ள தீவுக்கூட்ட நகராட்சியின் ஓர் அங்கமாக ஆண்டிபாக்சோசு தீவு நிர்வகிக்கப்படுகிறது. 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஆண்டிபாக்சோசு தீவில் 20 மக்கள் வசித்துக் கொண்டிருந்தனர்.[1] தீவெங்கும் திராட்சைத் தோட்டங்கள் பெருமளவில் பயிரிடப்பட்டிருக்கும். ஆன்டிபாக்சோசில் பல கடற்கரைகளும் அக்ராபீடியா என்ற ஒரு துறைமுகமும் உள்ளது.
உள்ளூர் பெயர்: Αντίπαξος or Αντίπαξοι | |
---|---|
கிரேக்க நாட்டிலுள்ள ஆண்டிபாக்சோசின் வௌடௌமி கடற்கரை. | |
புவியியல் | |
ஆள்கூறுகள் | 39°08′57.40″N 20°13′53.98″E / 39.1492778°N 20.2316611°E |
நிர்வாகம் | |
வெண்மையான மணல் பரப்பைக் கொண்ட விரிக்கா, கூழாங்கற்கள் நிரம்பிய மெசோவிரிக்கா மற்றும் வௌடௌமி என்பன முக்கியமான மூன்று கடற்கரைகளாகும். பாக்சோசு தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள காயோசு துறைமுகத்திலிருந்து வாடகை வாகனம் மூலம் 15 நிமிடப் பயணத்தில் ஆன்டிபாக்சோசு தீவை அடையலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Detailed census results 2011". National Statistical Service of Greece. Archived from the original (xls 2,7 MB) on 2013-12-25. பார்க்கப்பட்ட நாள் 2020-12-05.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)