ஆதம் கோசாக்கு

அங்கேரிய சதுரங்க வீரர்

ஆதம் கோசாக்கு (Ádám Kozák) அங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க கிராண்டுமாசுட்டர் ஆவார். 2002 ஆம் ஆண்டு சூன் மாதம் 15 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் அங்கேரி நாட்டின் சார்பாக இவரும் போட்டியிட்டார்.

ஆதம் கோசாக்கு
Ádám Kozák
2019 ஆம் ஆண்டு ரேடன்சியில் ஆதம் கோசாக்கு .
நாடுஅங்கேரி
பிறப்பு15 சூன் 2002 (2002-06-15) (அகவை 22)
புடாபெசுட்டு, அங்கேரி
பட்டம்கிராண்டுமாசுட்டர் (2020)
பிடே தரவுகோள்2526 (திசம்பர் 2021)
உச்சத் தரவுகோள்2610 (ஏப்ரல் 2024)

சதுரங்க வாழ்க்கை

தொகு

எசுத்தோனியா நாட்டின் மிகப்பெரிய நகரமான தாலின் நகரத்தில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் ஐரோப்பிய 18 வயதுக்கு உட்பட்டோருக்கான விரைவு சதுரங்கப் போட்டியில் இவர் வெற்றி பெற்றார். இதே போட்டியில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான மின்னல் வேகப் போட்டியிலும் இவர் வெற்றி பெற்றார். 2020 ஆம் ஆண்டில் இவருக்கு கிராண்டுமாசுட்டர் பட்டம் அளிக்கப்பட்டது. இளம் வயதில் கிராண்டுமாசுட்டர் பெற்ற அங்கேரியர் என்ற சிறப்பும் இவருக்கு கிடைத்தது.[1][2]

2021 ஆம் ஆண்டுக்கான சதுரங்க உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற ஐரோப்பிய கலப்பு தகுதி சதுரங்கப் போட்டியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 36 ஐரோப்பிய வீரர்களில் இவரும் ஒருவர்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Youngest Hungarian Chess Grand-master Wins U-18 Blitz Chess European Championship". Hungary Today (in ஆங்கிலம்). 2019-12-04. பார்க்கப்பட்ட நாள் 2021-07-08.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Kozak, Adam". ratings.fide.com. பார்க்கப்பட்ட நாள் 2021-07-08.
  3. nikita (30 May 2021). "36 European players qualified for FIDE World Chess Cup 2021 – Chessdom" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-08.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதம்_கோசாக்கு&oldid=4107770" இலிருந்து மீள்விக்கப்பட்டது