ஆதம் பாவ்சி

ஆதம் பாவ்சி (Adham Fawzy) எகிப்திய நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க வீரர் ஆவார். 2000 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். 2019 ஆம் ஆதம் பாவ்சிற்கு கிராண்ட்மாசுட்டர் பட்டத்தை பிடே அமைப்பு இவருக்கு வழங்கியது. 2023 ஆம் ஆண்டு மே மாத நிலவரப்படி, இவர் எகிப்து நாட்டின் மூன்றாவது அதிக எலோபுள்ளிகள் கொண்ட சதுரங்க வீரராகவும் ஆப்பிரிக்க கண்டத்தில் நான்காவது அதிக புள்ளிகள் கொண்ட சதுரங்க வீரராகவும் திகழ்ந்தார்.[1]

ஆதம் பாவ்சி
Adham Fawzy
நாடுஎகிப்து
பிறப்பு2000
பட்டம்கிராண்டு மாசுட்டர் (2019)
பிடே தரவுகோள்2477 (திசம்பர் 2021)
உச்சத் தரவுகோள்2523 (சூன் 2023)

சதுரங்க வாழ்க்கை தொகு

2018[2][3] மற்றும் 2019 [4] ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆப்பிரிக்க இளையோர்ர் சதுரங்க வெற்றியாளர் போட்டிகளை ஆதம் பாவ்சி வென்றார்.

2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆப்பிரிக்க சதுரங்க வெற்றியாளர் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.[5] 2021 ஆம் ஆண்டு சதுரங்க உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றார். 2023 ஆம் ஆண்டுக்கான ஆப்பிரிக்க சதுரங்க வெற்றியாளர் போட்டியை வென்றார்.[6]

2023 ஆம் ஆண்டு அசர்பைசான் நாட்டின் பக்கூ நகரில் நடைபெற்ற சதுரங்க உலகக் கோப்பை போட்டியில் விளையாடினார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Fawzy, Adham". ratings.fide.com. பார்க்கப்பட்ட நாள் 2023-05-18.
  2. "2019 African Junior Championship (Accra, Ghana)". பார்க்கப்பட்ட நாள் 2021-06-26.
  3. Masala, Kenya Chess (2019-01-12). "IM Fawzy Adham & WIM Anika Du Plessis win African Junior Chess Championship". Kenya Chess Masala (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-26.
  4. "Chess-Results Server Chess-results.com - 2019 African Junior Chess Championships - Open Section". chess-results.com. பார்க்கப்பட்ட நாள் 2021-06-26.
  5. Parodi (Alessandro_Parodi), Alessandro. "Ahmed Adly Wins Nip-and-Tuck African Chess Championship". Chess.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-26.
  6. "Chess-Results Server Chess-results.com - 2023 African Individual Chess Championship - Open". chess-results.com. பார்க்கப்பட்ட நாள் 2023-05-15.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதம்_பாவ்சி&oldid=3782726" இலிருந்து மீள்விக்கப்பட்டது