ஆதர்ஷ் ரத்தோர்
ஆதர்ஷ் ரத்தோர் (ஹிந்தியில் : आदर्श राठौर), (பிறப்பு 12 ஜூன் 1988) ஓர் இந்திய பத்திரிகையாளர், இசைக்கலைஞர் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தின் நாட்டுப்புற பாடகர் [1] ஆவார், 2010 பொதுநலவாய விளையாட்டுக்கள் ,புது தில்லி ஊழலைப் பற்றி திக்கர் ஹை என்ற ராப் பாடலுக்கு மிகவும் பிரபலமானவர். அப்பாடல் இணையத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது பிறகு அவர் சமூக வலைதளங்களில் பிரபலமானார்.[2]
ஆதர்ஷ் ரத்தோர் | |
---|---|
பிறப்பு | 12 சூன் 1988 ஜோகிந்தர் நகர் |
பிறப்பிடம் | இமாச்சலப் பிரதேசம், இந்தியா |
இசை வடிவங்கள் | நாட்டுப்புற இசை, இந்தி மொழி, இமாச்சல மொழி, ரிதம் அண்ட் புளூஸ் |
தொழில்(கள்) | இந்திய பத்திரிகையாளர், இசைக்கலைஞர், நாட்டுப்புற பாடகர், பாடலாசிரியர், சமூக ஆர்வலர், பரப்பிசை கலைஞர் |
இசைத்துறையில் | 2009 ம் ஆண்டு முதல் |
வெளியீட்டு நிறுவனங்கள் | பி எம் வி இசை நிறுவனம் |
ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஜோகிந்தர் நகரில் பிறந்த இவர், பிபிசி ஹிந்தி செய்திப்பிரிவின் இணைய பத்திரிக்கையில் பத்திரிகையாளராகப் பணிபுரிகிறார். முன்னதாக அவர் டைம்ஸ் குழுமத்தில் பணிபுரிந்தார்.[3] அதற்கு முன் சில செய்தி ஒளியலை வரிசைகளில் பணியாற்றினார்.[2] 2010 பொதுநலவாய விளையாட்டுக்கள் ,புது தில்லியில் நடைபெற்ற ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தை அவர் தொடங்கினார். பிரச்சாரத்திற்கான அவரது பாடல் [4] உலகளாவிய இணைய பயனர்களிடையே பெரும் வெற்றி பெற்றது.[5] ஹிமாச்சலி மொழியின் முதல் பரப்பிசைக்கலைஞர் என்ற பட்டத்தை அவர் பெற்றுள்ளார். கொலவெரி டியின் ஹிமாச்சல் பதிப்பிற்காக அவர் [6] பாராட்டப்பட்டார்.[7]
வேலை
தொகு- அசே ஹிமாச்சலி (2009)
- ஐஜா கரா ஜோ (2009)
- திக்கர் ஹை (2010)
- ஷரீஃப் மஹ்னு (2011)
மேற்கோள்கள்
தொகு- ↑ http://himsamachar.com/हिलोपा-में-शामिल-हो-सकते-ह/
- ↑ 2.0 2.1 "A musical rap for CWG". http://www.mid-day.com/sports/2010/sep/280910-Delhi-CWG-ills-onilne-song-big-hit.htm.
- ↑ "सवाल देश के भविष्य का है « Divya Himachal: No. 1 in Himachal news – News – Hindi news – Himachal news – latest Himachal news". www.divyahimachal.com. Archived from the original on 21 January 2013. பார்க்கப்பட்ட நாள் 22 May 2022.
- ↑ . 28 September 2010.
- ↑ . 28 September 2010.h
- ↑ "Himachali Version of Kolavari Di by Aadarsh Rathore". The News Himachal. 2011-12-15. பார்க்கப்பட்ட நாள் 2013-10-05.
- ↑ "आ गया हिमाचली कोलावरी डी « Divya Himachal: No. 1 in Himachal news – News – Hindi news – Himachal news – latest Himachal news". www.divyahimachal.com. Archived from the original on 21 January 2013. பார்க்கப்பட்ட நாள் 22 May 2022.