இசை
சொல்லிசை (தமிழ் ராப்)
ராப் இசை
கலைஞர்கள்
டாக்டர் பர்ண்
லங்சடசில்
கிறிசான்
சஞ்சீவன்
வதனா
சுரேசு த வண்
கிளியோபாற்றா VII
குழுக்கள்
சக்ரசோனிக்
சின்ன பேரரசு
பூம்மிரங்சு
யோகி பி உடன் நட்சத்ரா
சைன்
லீகலைசு
த புரபொசி
தமிழ்ப் புலவர்
கைப்பர்கினைட்டிக்சு
கிப்கொப் தமிழா

தொகு

சொல்லிசை அல்லது இராப்பு இசை (Rap music) அல்லது இப்பு ஆப்பு இசை (Hip hop music) இப்பு ஆப்பு பண்பாட்டில் ஒரு வகுப்பு ஆகும். 1970களின் நியூ யார்க்கு நகரத்தில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களால் உருவாக்கப்பட்ட இசை இன்று அமெரிக்காவிலும் உலகம் முழுவதிலும் மிகப் புகழ்பெற்ற இசை வகைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. நியூ யார்க்கு நகரம் தவிர அட்டுலாண்டா, இலாசு ஏஞ்சலசு, தொராண்டோ, இலண்டன் நகரில் இன்று பல சொல்லிசைக் கலைஞர்கள் இருக்கிறார்கள். சொல்லிசை பலவிதமானவை; அவற்றில் சில: கிராங்கு (Crunk), சீ-பங்கு (G-Funk), கிழக்குக் கடற்கரை சொல்லிசை (East Coast Rap), கேங்குசிடா சொல்லிசை (Gangsta Rap) ஆகும்.

வரலாறு

தொகு

பொதுப்பட சொல் இசையின் வரலாறு மூன்று இனத்தில் பிரிக்கப்படலாம்.

சொல் இசையின் பொற்காலம் (Golden Age of Hip Hop) 1970கள் முதல் 1990 வரை ஆகும். இந்த ஆண்டுகளில் நியூ யார்க்கு சொல் இசை தலைப்பட்டது. இக்காலப்பகுதியின் சொல் இசையின் பெயர் (Old School). சில புகழ்பெற்ற சொல் இசை கலைஞர்கள் கருடிசு பிளோ (Kurtis Blow), ஆப்பிரிக்கா பம்பாட்டா (Afrika Bambaataa), கே ஆர் எசு-வன் (KRS-One), எரிக்கு பி & இராகிம் (Eric B & Rakim), மாரிலி மாரல் (Marley Marl)ஆகியோர்.

1988 முதல் 1996 வரை கேங்குசுடா இராப்பும் கிழக்கு-மேற்கு எதிரிடை இப்பு ஆப்பை மேற்பட்டது. 1987 இல் இலாசு ஏஞ்சலசில் இருந்த NWA சொல்லிசைக் கூட்டணி "Straight Outta Compton" ஆல்பம் படைத்தார்கள். இந்த ஆல்பம் முதல் பிரதான "கேங்குசுடா இராப்பு" ஆல்பம் ஆகும். NWAஇல் இருந்த இசை கலைஞர்கள் ஐசு கியூபு (Ice Cube), இடாட்டர் திரே (Dr. Dre) மிக புகழ்பெற்ற தனி ஆல்பங்கள் படைத்தார்கள். 1991 இல் ஓக்குலாந்து-இல் இருந்த தூப்பாக்கு சகூர் (Tupac Shakur) அவரின் முதல் ஆல்பம், "2Pacalypse Now", படைத்தார். 1991 முதல் 1996 வரை 75 மில்லியன் ஆல்பம்கள்ளை விற்று, இன்று வரை உலகில் சொல்விசை ஆல்பம் விற்ற இசை கலைஞர்களின் இவர் முதலாவார்.

1988 முதல் 1993 வரை மேற்கு கடற்கரையில் இருந்த சொல் இசை மிக புகழ்பெற்றதாக இருந்தது. ஆனால் 1994-இல் நியூ யார்க்கு நகரிலிருந்த நாசு (Nas), நொட்டோரியசு பீ.ஐ.சீ (Notorious BIG) என்ற சொல்லிசைக் கலைஞர்கள் இவர்களின் முதல் ஆல்பம்களை படைத்தார்கள்.

நொட்டோரியசு பீ.ஐ.சீயுக்கும் தூப்பாக்கு சகூருக்கும் 1994 முதல் 1996 வரை எதிரிடை இருந்தது. 1996 செப்டம்பர் மாதத்தில் தூப்பாக்கு சுட்டுக்கொல்லப்பட்டு காலமானார். 6 மாதங்கள் பிரகு நொட்டோரியசு பீ.ஐ.சீ சுட்டுக்கொல்லப்பட்டு காலமானார்.

தூப்பாக்கு, நொட்டோரியசு பீ.ஐ.சீ மரணத்துக்கு பிரகு செய்-சி (Jay-Z), எமினெம் (Eminem), ஒளட்காசுட்டு (Outkast), 50 செண்டு (50 Cent) சில புகழ்பெற்ற ராப் இசை கலைஞர்கள் ஆவார்.

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சொல்லிசை&oldid=3463610" இலிருந்து மீள்விக்கப்பட்டது