ஆதிகாராள வேளாளர்

ஆதிகாராள வே(வெள்)ளாளர்கள் தற்பொழுது தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் 18 ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பிள்ளை பட்டம் மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

புலப்பெயர்வு

தொகு

இவர்கள் சங்க காலத்தில் நடுநாடு என்று அழைக்கப்பட்ட தற்போதைய விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதிகளில் இருந்து சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் திண்டுக்கலுக்கு இடம்பெயர்ந்து குடி அமர்ந்ததாக கருதப்படுகிறது.

பழக்க வழக்கங்கள்

தொகு

திருமண முறை

தொகு

இந்த 18 பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்குள்ளாகவே மட்டும் திருமணம் செய்து கொள்வார்கள். மற்ற வெள்ளாளர்கள் உடன் திருமண பந்தம் செய்வதில்லை.

மற்ற வெள்ளாளர்களை காட்டிலும் சில கொஞ்சம் வித்தியாசமாக இவர்களுக்கு என்று தனியாக காராள திருமண ஆரத்தி பாடல்கள், திருமண தாழி அமைப்பு போன்றவை உள்ளன. குலத்தெய்வ கோவில்களும் உள்ளன. அம்மன் கடவுளர்களே அதிகமான குலத்தெய்வமாக இவர்களுக்கு வருகின்றனர்.

வாழும் பகுதிகள்

தொகு

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதிகாராள வெள்ளாளர்கள் வசிக்கும் 18 பட்டி கிராம ஊர்கள் :

  1. செட்டிநாயக்கன்பட்டி (தலைநகரம்)
  2. சென்னமநாயக்கன்பட்டி
  3. விராலிப்பட்டி
  4. முனியபிள்ளைபட்டி
  5. காப்பிளியபட்டி
  6. கள்ளிப்பட்டி
  7. அலக்குவார்பட்டி
  8. ராஐக்காபட்டி
  9. காமாட்சிபுரம்
  10. ரெங்கநாதபுரம்
  11. பித்தளைப்பட்டி
  12. மாலைப்பட்டி
  13. சரளைப்பட்டி
  14. ஒத்தூர்
  15. வெள்ளைமாலைப்பட்டி
  16. வண்ணம்பட்டி
  17. ஆத்தூர்
  18. நல்லமநாயக்கன்பட்டி

இந்த 18 பட்டி கிராம ஆதிகாராள வெள்ளாளர்களின் தலைநகரமாக செட்டிநாயக்கன்பட்டி கிராமம் இருக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதிகாராள_வேளாளர்&oldid=4131726" இலிருந்து மீள்விக்கப்பட்டது