ஆதித்யா விக்ரம் பிர்லா

ஆதித்யா விக்ரம் பிர்லா (Aditya Vikram Birla) (14 நவம்பர் 1943 - 1 அக்டோபர் 1995), இவர் ஓர் இந்திய தொழிலதிபராவார். இந்தியாவின் மிகப்பெரிய வணிகக் குடும்பங்களில் ஒன்றில் பிறந்த இவர், தனது குழுவை நெசவுத் தொழிற்துறை, வேதியியல் மற்றும் தொலைத்தொடர்பு எனப் பன்முகப்படுத்துவதை மேற்பார்வையிட்டார். தென்கிழக்கு ஆசியா, பிலிபீன்சு மற்றும் எகிப்தில் ஆலைகளை அமைத்து வெளிநாடுகளுக்கு விரிவுபடுத்திய முதல் இந்திய தொழிலதிபர்களில் இவரும் ஒருவர். 1995 ஆம் ஆண்டில் இவரது நிகர மதிப்பு 250 மில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டது. 51 வயதில் இவரது மரணம் இவரது இளம் மகன் குமார் மங்கலத்தை இவரது ஆதித்ய பிர்லா குழுமத்திற்கு பொறுப்பேற்க வைத்தது.

ஆதித்யா விக்ரம் பிர்லா
2013இல் வெளியிடப்பட்ட அஞ்சல் முத்திரையில் பிர்லா
பிறப்பு14 நவம்பர் 1943
கொல்கத்தா, வங்காளம், இந்தியா
இறப்பு1 அக்டோபர் 1995(1995-10-01) (அகவை 51)
பால்ட்டிமோர், மேரிலாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள்
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம் , புனித சேவியர் கல்லூரி, கொல்கத்தா
பணிஆதித்ய பிர்லா குழுமத்தின் முன்னால் தலைவர்
பெற்றோர்வசந்த குமார் பிர்லா, சரளா பிர்லா
வாழ்க்கைத்
துணை
இராசசிறீ
பிள்ளைகள்குமார் மங்கலம் (மகன்)
வாசவதத்தா பஜாஜ் (மகள்)

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்

தொகு

பிர்லா 1943 நவம்பர் 14 அன்று கொல்கத்தாவில் தொழிலதிபர் வசந்த் குமார் [1] மற்றும் சரளா பிர்லா ஆகியோருக்கு பிறந்தார். [2] இவரது தாத்தா கன்சியாம் தாசு பிர்லா மகாத்மா காந்தியின் கூட்டாளியாக இருந்தார். மேலும் அலுமினிய விற்பனை மற்றும் இந்துஸ்தான் அம்பாசடர் உற்பத்தியாளராக தனது செல்வத்தை வளர்த்துக் கொண்டார்.

கொல்கத்தாவின் புனித சேவியர் கல்லூரியில் படித்த பிறகு, மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தில் வேதிப் பொறியியல் பட்டம் பெற்றார். [1] இவர் இராசசிறீ என்பவரை மணந்தார். [3] இவர்களுக்கு வாசவதத்தா என்ற ஒரு மகளும், குமார் மங்கலம் என்ற ஒரு மகனும் இருக்கின்றனர். குமார் மங்கலம் இப்போது ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவராக உள்ளார். [4]

ஆதித்யா விக்ரம் பிர்லா தனது சமசுகிருத கல்வியை கொல்கத்தாவில் உள்ள மறைந்த சமசுகிருத அறிஞர் துர்கா பிரசாத் சாத்திரியிடமிருந்து பெற்றார்.

இறப்பு

தொகு

1993 ஆம் ஆண்டில், பிர்லாவுக்கு முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இவரது வயதான தந்தை மற்றும் இளம் மகன் குழுவின் பல பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர். [5] இந்த வகை புற்றுநோய்க்காக அமெரிக்காவின் பால்ட்டிமோர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் உட்பட சிறந்த மருத்துவ சிகிச்சை பிர்லாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கே இவர் அக்டோபர் 1, 1995 அன்று இறந்தார். முன்னாள் இந்தியப் பிரதமர் (அப்போதைய நிதியமைச்சர் ) மன்மோகன் சிங் திரு பிர்லாவை "இந்தியாவின் சிறந்த மற்றும் பிரகாசமான குடிமக்களில் ஒருவர்" என்று அழைத்தார். [1]

மரியாதை

தொகு

இவரது நினைவாக இவரது குழுமம் ஆதித்யா பிர்லா உதவித்தொகையை ஏற்படுத்தியது. ஒவ்வொரு ஆண்டும் ஏழு இந்திய மேலாண்மை நிறுவனங்கள், ஏழு இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள், பிர்லா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் நிறுவனம் மற்றும் மேலாண்மை ஆய்வுகள் பீடம் (தில்லி) ஆகியவற்றில் இருந்து 40 க்கும் மேற்பட்ட அறிஞர்கள் இந்த உதவித்தொகையைப் பெறுகின்றனர். 2012–13 ஆண்டு முதல், இந்த உதவித்தொகை 4 சட்ட வளாகங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. [6]

பிம்ப்ரி-சிஞ்ச்வட்டில் உள்ள ஆதித்யா பிர்லா நினைவு மருத்துவமனை இவரது பெயரிடப்பட்டுள்ளது.

1973 ஆம் ஆண்டில் ஆதித்யா விக்ரம் பிர்லாவால் நிறுவப்பட்ட சங்கீத கலா கேந்திரா 1996 ஆம் ஆண்டு முதல் ஆதித்யா விக்ரம் பிர்லா கலாசிகர் மற்றும் கலாகிரன் புராஸ்கர் விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் சிறந்து விளங்கும் நாடக மற்றும் கலை கலைகளுக்கு வழங்குகிறது. [7] இந்திய அரசால் சிறப்பு அஞ்சல் முத்திரை 14 சனவரி 2013 அன்று வெளியிடப்பட்டது. இவரை "இந்தியாவின் முதல் உலகளாவிய தொழிலதிபர்" என்று கௌரவித்தது. [8]

சுயசரிதை

தொகு
  • Aditya Vikram Birla, a biography[9] by Minhaz Merchant.[10]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Hazarika, Sanjoy (3 October 1995). "Aditya Vikram Birla, 52, A Leading Indian Businessman". The New York Times. https://query.nytimes.com/gst/fullpage.html?res=990CE2DF173FF930A35753C1A963958260. பார்த்த நாள்: 6 October 2007. 
  2. "Passing the Baton". Economic Times. 27 May 2005 இம் மூலத்தில் இருந்து 12 அக்டோபர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071012131001/http://www.adityabirla.com/media/press_reports/passing_the_baton.htm. பார்த்த நாள்: 6 October 2007. 
  3. "At home: Rajashree Birla". www.ft.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2013-01-11. பார்க்கப்பட்ட நாள் 2020-06-02.
  4. "At the helm (Aditya Birla Group Management Team)". Aditya Birla Group. Archived from the original on 9 October 2007. பார்க்கப்பட்ட நாள் 6 October 2007.
  5. "Story of one of India's prominent business families". 20 February 2005. http://www.moneycontrol.com/india/news/book-review/storyoneindias-prominent-business-families-/267930. பார்த்த நாள்: 6 October 2007. 
  6. "Aditya Birla Scholarship". Experts' Global (in அமெரிக்க ஆங்கிலம்). 2015-08-22. பார்க்கப்பட்ட நாள் 2020-05-27.
  7. Chavan to give away Aditya Vikram Birla awards.
  8. Aditya Vikram Birla. indiapost.gov.in (14 January 2013)
  9. Minhaz Merchant (1997). Aditya Vikram Birla, a biography. Viking.
  10. "Minhaz Merchant". The Times of India இம் மூலத்தில் இருந்து 16 June 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130616201647/http://blogs.timesofindia.indiatimes.com/headon/page/authorProfile?page=authorProfile. பார்த்த நாள்: 4 August 2013. 

A special commemorative stamp issued by postal department of India on Aditya vikram Birla பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதித்யா_விக்ரம்_பிர்லா&oldid=3945691" இலிருந்து மீள்விக்கப்பட்டது