ஆதியோகி சிவன் சிலை

இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள திறந்தவெளி சிலை

ஆதியோகி சிலை தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூருக்கு அருகில் அமைந்துள்ளது. இச்சிலை 112 அடி (34 மீ) உயரம் கொண்டது. ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவால் வடிவமைக்கப்பட்டது. இது 500 டன்கள் (490 நீண்ட டன்; 550 குறுகிய டன்) கொண்ட அடித்தளத்துடன் கட்டப்பட்டது. இச்சிலை யோகா மேம்பாட்டுக்காகவும், எழுச்சிக்காகவும் கட்டமைக்கப்பட்டது. ஆதியோகி என்று பெயரிடப்பட்டது.

ஆதியோகி சிலை
ஆள்கூறுகள்10°58′21″N 76°44′26″E / 10.972416°N 76.740602°E / 10.972416; 76.740602 (Adiyogi (Isha Yoga Center, India))
இடம்ஈஷா யோக மையம், கோயம்புத்தூர், தமிழ் நாடு, இந்தியா
வடிவமைப்பாளர்ஜக்கி வாசுதேவ்
வகைசிலை
கட்டுமானப் பொருள்எஃகு
உயரம்34 மீட்டர்கள் (112 அடி)
முடிவுற்ற நாள்24 பிப்பிரவரி 2017
அர்ப்பணிப்புஆதி யோகியாக சிவன்

ஆதியோகி சிலை ஆண்டுதோறும் கொண்டாடப்படும் மகா சிவராத்திரி விழாவில் 24 பிப்ரவரி 2017 அன்று இந்திய பிரதமர் நரேந்திர மோதியால் திறந்து வைக்கப்பட்டது. இந்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் அதன் உத்தியோகபூர்வ 'இன்கிரிடிபிள் இந்தியா' பிரச்சாரத்தில் ஒரு புனிதத் தலமாக இச்சிலையை உள்ளடக்கியுள்ளது.[1]

உசாத்துணை

தொகு

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதியோகி_சிவன்_சிலை&oldid=3338235" இலிருந்து மீள்விக்கப்பட்டது