ஆதிர் ரஞ்சன் சௌத்திரி
ஆதீர் ரஞ்சன் சௌத்திரி (Adhir Ranjan Chowdhury) (பிறப்பு:2 ஏப்ரல் 1956), இந்தியாவின் மேற்கு வங்காள மாநில அரசியல்வாதியும், சமூக ஆர்வலரும் ஆவார். இவர் மே 2019-இல் பகரம்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய மக்களைவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
ஆதீர் ரஞ்சன் சௌத்திரி மக்களவை உறுப்பினர் | |
---|---|
தலைவர், இந்திய தேசிய காங்கிரசு, மக்களவை | |
பதவியில் 19 சூன் 2019 – 4 ஜுன் 2024 | |
முன்னையவர் | மல்லிகார்ச்சுன் கர்கெ |
இந்திய மக்களவை உறுப்பினர் பகரம்பூர் மக்களவைத் தொகுதி | |
பதவியில் அக்டோபர் 1999 – ஜூன் 2024 | |
இரயில்வே இணை அமைச்சர் | |
பதவியில் 28 அக்டோபர் 2012 – 16 மே 2014 | |
மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1996–1999 | |
முன்னையவர் | சிசார் சர்க்கார் |
பின்னவர் | நிருபன் சௌத்திரி |
தொகுதி | நபக்ரம் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 2 ஏப்ரல் 1956 பகரம்பூர், மேற்கு வங்காளம், இந்தியா |
துணைவர் | அர்பிதா சௌத்திரி |
பிள்ளைகள் | ஹொமோந்தி (மகள்) |
வாழிடம்(s) | 9, ஹரிபாபு தெரு காசிம் பஜார் பகரம்பூர் - 2 மேற்கு வங்காளம் - 742102 |
தொழில் | அரசியல்வாதி & சமூக ஆர்வலர் |
அரசியல் வாழ்க்கை
தொகுஆதிர் ரஞ்சன் சௌத்திரி 1996-இல் இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பில், நபாகிராம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து மேற்கு வங்க சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4] 1999-இல் அதிர் ரஞ்சன் சௌத்திரி பகரம்பூர் மக்களவைத் தொகுதிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][5] 28 அக்டோபர் 2012-இல் சௌத்திரி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் இரயில்வே இணை அமைச்சராக பதவியேற்றார்.[6] 10 பிப்ரவரி 2014-இல் மேற்கு வங்காள காங்கிரசு கட்சியின் தலைவரானார்.[7] 19 சூன் 2019 அன்று மக்களவை காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8] இவர் 2020 -2021 ஆண்டிற்கான நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கபட்டார்.[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ மக்களவை காங்கிரஸ் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்திரி தேர்வு
- ↑ மக்களவை காங்கிரஸ் தலைவராகிறார் ரஞ்சன் சவுத்ரி
- ↑ 3.0 3.1 "Congress finds a champion in former Naxalite Adhir Ranjan Chowdhury to take on Left Front". இந்தியா டுடே. 9 June 2003. பார்க்கப்பட்ட நாள் 30 May 2019.
- ↑ "Nabagram". Elections in India. Archived from the original on 30 மே 2019. பார்க்கப்பட்ட நாள் 30 May 2019.
- ↑ "Berhampore". Elections. Archived from the original on 7 ஜூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 30 May 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ https://www.news18.com/news/politics/cabinet-reshuffle-18-518897.html
- ↑ "In tough message, Cong makes Adhir Chowdhury PCC chief - Times of India". பார்க்கப்பட்ட நாள் 20 September 2016.
- ↑ https://www.indiatoday.in/india/story/adhir-ranjan-chowdhury-leader-of-congress-in-lok-sabha-1551203-2019-06-18
- ↑ பி.ஏ.சி., தலைவராக ஆதிர் ரஞ்சன் நியமனம்