ஆதி பெரோஸ்ஷா மார்ஸ்பன்

நாடக எழுத்தாளர்

ஆதி பெரோஸ்ஷா மார்ஸ்பன் (Adi Pherozeshah Marzban; 1914-1987) குசராத்தைச் சேர்ந்த பார்சி நாடக ஆசிரியரும், நடிகரும், இயக்குநரும், ஒளிபரப்பாளரும் ஆவார். இவர் பார்சி நாடகத்தை நவீனமயமாக்கும் முயற்சிகளுக்காக அறியப்பட்டவர்.[1] 1964 இல் இந்தியாவின் நான்காவது உயரிய குடிமகன் விருதான பத்மசிறீ மற்றும் 1970 இல் சங்கீத நாடக அகாதமி விருது இவருக்கு வழங்கப்பட்டது.

ஆதி பெரோஸ்ஷா மார்ஸ்பன்
பிறப்பு17 ஏப்ரல் 1914
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
இறப்புபிப்ரவரி 1987 (வயது 72)
மும்பை, இந்தியா
பணிநாடக ஆளுமை
பெற்றோர்பெரோஸ்ஷா ஜஹாங்கிர் மார்ஸ்பன்
வாழ்க்கைத்
துணை
சில்லா
விருதுகள்பத்மசிறீ (1964)
சங்கீத நாடக அகாதமி விருது (1970)

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

ஆதி மார்ஸ்பன் பம்பாயில் ( இப்போது மும்பை ) 1914 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி பெரோஸ்ஷா ஜஹாங்கிர் மார்ஸ்பன் என்பவருக்கு பிறந்தார். இவர் நோம் டி ப்ளூம், பிஜாம் [2][3] , மசாந்தரன், மொஹோரோ, மாசி நோ மாகோ மற்றும் மகாய் போன்ற நாடகங்களை எழுதியுள்ளார்.[4] ஜாம்-இ-ஜாம்ஷெட் மற்றும் பம்பாய் சமாச்சார் ஆகிய இரண்டு குஜராத்தி செய்தித்தாள்களின் நிறுவனர் பர்துன்ஜீ மார்ஸ்பானின் பரம்பரையில் வந்தவர்.[5] தனது பள்ளிப்படிப்பை பர்தா நியூ உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். 1933 இல் எல்பின்ஸ்டோன் கல்லூரியில் பட்டம் பெற்றார். இந்த நேரத்தில், தனது வருங்கால தயாரிப்பாளரும் சக ஊழியருமான பேசி கந்தவாலாவை சந்தித்தார். மார்ஸ்பன் வெஸ்டர்ன் இந்தியா என்ற நாடக வ்விறுவனத்தின் விளம்பர அதிகாரியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால் 1936 இல் ஜாம்-இ-ஜாம்ஷெட் என்ற தனது குடும்பப் பத்திரிகையின் தலையங்கப் பணியை மேற்கொள்வதற்காக வேலையை விட்டுவிட்டார். அதே நேரத்தில் குப்சுப் என்ற மாதாந்திர நகைச்சுவை இதழிலும் பணியாற்றினார்.

விருதுகள்

தொகு

இந்திய அரசு இவருக்கு 1964 ஆம் ஆண்டு நான்காவது உயரிய குடிமகன் விருதான பத்மசிறீ விருதை வழங்கியது [6] மேலும் இவர் 1970 இல் சங்கீத நாடக அகாதமி வவிருதைப் பெற்றார் [7]

இவரது மனைவி சில்லா, இவரது நினைவாக , தேசிய கலை நிகழ்ச்சிகளுக்கான மையத்தின் கீழ், ஆதி மார்ஸ்பன் அறக்கட்டளை நிதி என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை அமைத்துள்ளார்.[2]

இதனையும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. Jesse S. Palsetia (2001). The Parsis of India. Brill. p. 368. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789004121140.
  2. 2.0 2.1 "Parsi Khabar". Parsi Khabar. 22 August 2009. பார்க்கப்பட்ட நாள் 2 May 2015.
  3. "Mid Day". Mid Day. 19 August 2009. பார்க்கப்பட்ட நாள் 2 May 2015.
  4. Bulletin of the Institute of Traditional Cultures.
  5. "Culture talk". https://timesofindia.indiatimes.com/bombay-times/Culture-talk/articleshow/1809179847.cms?. 
  6. "Padma Shri" (PDF). Padma Shri. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
  7. "Sangeet Natak Akademi award". Sangeet Natak Akademi. 2015. Archived from the original on 30 May 2015. பார்க்கப்பட்ட நாள் 1 May 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதி_பெரோஸ்ஷா_மார்ஸ்பன்&oldid=4169348" இலிருந்து மீள்விக்கப்பட்டது