ஆதி (ஒலிப்பு) என்னும் பெயர் கொண்ட குறுநிலத் தலைவர்களில் ஒருவன் மல்லி கிழான் காரியாதி. இந்த ஆதியின் தந்தை காரி.

இவன் கடையெழு வள்ளல்களில் ஒருவனான காரி அல்லன். இந்தக் கடையெழு வள்ளல்களில் ஒருவனான காரி மலையமான் திருமுடிக் காரி. இவனது ஊர் திருக்கோவலூர்.

மற்றொரு காரி முள்ளூர் மன்னன்.

இன்னொருவன் மல்லி என்னும் ஊர்த் தலைவன் காரி. அவனது மகன் காரியாதி.[1]

ஆதிமந்தி என்பவள் சோழன் கரிகாலன் மகள்.

ஆதி அருமன் எனப் போற்றப்படும் இந்த அருமனின் தந்தை ஆதி எனத் தெரிகிறது. இவனது ஊர் வழியாகச் செல்பவர்கள் பனங்கள், பனம்பழம் ஆகியவற்றை உண்டு மகிழ்வார்களாம்.[2]

அடிக்குறிப்பு

தொகு
  1. ஆவூர் மூலங்கிழார் பாடல் - புறநானூறு 177
  2. கள்ளிற் கேளிர் ஆர்த்திய உள்ளூர்ப்
    பாளை தந்த பஞ்சி அம் குறுங்காய்
    ஓங்கு இரும் பெண்ணை நுங்கொடு பெயரும்
    ஆதி அருமன் மூதூர் – கள்ளில் ஆத்திரையனார் பாடல் - குறுந்தொகை 293
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதி_(அரசன்)&oldid=2539005" இலிருந்து மீள்விக்கப்பட்டது