ஆந்திர மகிளா சபா தகவற்பள்ளி

ஆந்திர மகிளா சபா தகவற்பள்ளி (Andhra Mahila Sabha School Of Informatics) என்பது இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத்தில் அமைந்துள்ள பெண்களுக்கான தகவல் சார்ந்த மேலாண்மை கல்லூரியாகும். [1]

ஆந்திர மகிளா சபா தகவற்பள்ளி
Other nameகள்
AMSSOI
வகைதனியார் மகளிர் கல்லூரி
உருவாக்கம்1998; 26 ஆண்டுகளுக்கு முன்னர் (1998)
நிறுவுனர்துர்காபாய் தேஷ்முக் மகிளா சபாவின் (ஆந்திர மகிளா சபா)
சார்புதெலங்காணா மகளிர் பல்கலைக்கழகம்
தரநிர்ணயம்அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு
தலைவர்முனைவர் ரமாதேவி
தலைவர்ஒய்.சத்தியநாராயண ராவ்
முதல்வர்முனைவர் கண்டெட்டி விஜயலட்சுமி
பணிப்பாளர்பேராசிரியர் கே விஜயலட்சுமி
அமைவிடம்
துர்காபாய் தேஷ்முக் கல்வி வளாகம், உஸ்மானியா பல்கலைக்கழக சாலை, OU பொறியியல் கல்லூரி எதிரில்,
, , ,
17°24′23″N 78°31′00″E / 17.406329°N 78.516644°E / 17.406329; 78.516644
வளாகம்நகர்ப்புறம்
இணையதளம்கல்லூரி இணையதளம்
ஆந்திர மகிளா சபா தகவற்பள்ளி is located in தெலங்காணா
ஆந்திர மகிளா சபா தகவற்பள்ளி
Location in தெலங்காணா
ஆந்திர மகிளா சபா தகவற்பள்ளி is located in இந்தியா
ஆந்திர மகிளா சபா தகவற்பள்ளி
ஆந்திர மகிளா சபா தகவற்பள்ளி (இந்தியா)

இந்திய கணிணி கழகம் (Computer Society of India (CSI)) என்பதன் நிறுவன உறுப்பினரான இக்கல்லூரி ஆந்திர மகிளா சபாவின் ஒரு பிரிவாகும். தெலங்காணா மகளிர் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள இக்கல்லூரி, மேலாண்மை படிப்பில் பட்டம் பெறும் பெண்களுக்கான முதுகலை பாடத்திட்டத்தை பயிற்றுவிக்கிறது. 2003 ஆம் ஆண்டில் DVR விட்டல் மற்றும் இக்கல்லூரியின் முன்னாள் இயக்குனர் ஷௌகத் ஏ மிர்சா ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இதன் மாணவர் பிரிவு நிறுவப்பட்டுள்ளது.[2]

வரலாறு தொகு

1998 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கல்லூரி பத்ம விபூஷன் விருது பெற்றவரும் இந்திய சுதந்திரப் போராட்ட வீரருமான துர்காபாய் தேஷ்முக்கினால் நிறுவப்பட்ட துர்காபாய் தேஷ்முக் மகிளா சபா எனப்படும் ஆந்திர மகிளா சபா எனப்படும் தன்னார்வ சமூக நல அமைப்பின் மூலம் தொடங்கப்பட்டதாகும்.

வணிக நிர்வாகம் மற்றும் கணினி பயன்பாடுகளில் முதுகலை படிப்புகளில் தரமான கல்வியை வழங்குவதன் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் அவர்களின் வாழ்வில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வருவது ஆகியவைகளை இதன் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

அங்கீகாரம் தொகு

தெலங்காணா மகளிர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள இக்கல்லூரியானது, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுனால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. [3]

  1. "AMSSOI - ஆந்திரா மகிளா சபா இன்ஃபர்மேட்டிக்ஸ் பள்ளி".
  2. "Andhra Mahila Sabha School of Informatics, Hyderabad Infrastructure and Facilities".
  3. "தெலுங்கானா மாநிலத்திற்கான AICTE அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் பட்டியல்: 2023-2024".