ஆந்தை (புலவர்)

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனைப் பகைவர்கள் தாக்க வந்தபோது அவர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்யாவிட்டால் என் நிலை இன்னதாகட்டும் என வஞ்சினம் கூறும்போது தனக்குக் கண்போல் நண்பர்களாக இருந்தவர்களைப் பிரிந்து துன்புறுவேனாகுக என்று குறிப்பிடுகிறான்.[1]
அப்போது அவன் குறிப்பிடும் அவனது நண்பர்கள் ஆறு பேர்.

  1. வையை வைப்பின் மையற்கோமான்
  2. மாவன்
  3. மன்னெயிலாந்தை
  4. உரைசால் அந்துவஞ்சாத்தன் (புலவர்)
  5. ஆதனழிசி
  6. இயக்கன்

என்போர் சங்கப்பாடல்களைப் பாடிய 473 புலவர்களில் எயினந்தையார் என்பவர் ஒருவர். இவரது ஒரே ஒரு பாடல் நற்றிணை 43ஆம் பாடலாக உள்ளது.

இந்த எயினந்தையாரே பூதப்பாண்டியனால் குறிப்பிடப்பட்ட எயிலாந்தை என்பது பொருத்தமான முடிபு.

ஆந்தையார் எனப் பெயர் பூண்ட பிற சங்ககாலப் புலவர்களையும் இங்குத் தொகுத்து எண்ணிப் பார்க்கலாம்.

ஆந்தையர் – பிசிராந்தையார்
ஆந்தையார் – அஞ்சில் ஆந்தையார்
ஆந்தையார் – ஓதலாந்தையார்
ஆந்தையார் – சிறைக்குடி ஆந்தையார்

அடிக்குறிப்பு

தொகு
  1. ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் பாட்டு – புறநானூறு 71
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆந்தை_(புலவர்)&oldid=3204255" இலிருந்து மீள்விக்கப்பட்டது