நண்பர்கள் (திரைப்படம்)
நண்பர்கள் (Nanbargal) ஷோபா சந்திரசேகர் இயக்கத்தில், 1991 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ்த் திரைப்படமாகும். விஜய் தயாரிப்பில், பபுள் போஸ் மற்றும் சங்கீதா ராஜன் இசை அமைப்பில், 14 பிப்ரவரி 1991 ஆம் ஆண்டு வெளியானது. நீரஜ், மம்தா குல்கர்னி, விவேக், தினேஷ், சுந்தர், ஷிலி கபூர், நாகேஷ், மனோரமா, சங்கீதா மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு திரைக்கதை எழுதியவர் எஸ். ஏ. சந்திரசேகர் ஆவார். வணிக ரீதியாக வெற்றி பெற்ற இப்படத்தை, ஹிந்தி மொழியில் மேரா தில் தேரே லியே என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டு வணிகரீதியாகத் தோல்வி அடைந்தது.[1][2][3]
நண்பர்கள் | |
---|---|
இயக்கம் | சோபா சந்திரசேகர் |
தயாரிப்பு | விஜய் |
கதை | சோபா சந்திரசேகர் |
திரைக்கதை | எஸ். ஏ. சந்திரசேகர் |
இசை | பாடல்கள்: பாபுல் போஸ் பின்னணி இசை: சங்கீத ராஜன் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | எஸ். ஜெயச்சந்திரன் |
படத்தொகுப்பு | டி. ஷியாம் முகர்ஜி |
கலையகம் | வி. வி. கிரியேஷன்ஸ் |
வெளியீடு | பெப்ரவரி 14, 1991 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகுநீரஜ், மம்தா குல்கர்னி, விவேக் (நகைச்சுவை நடிகர்), தினேஷ், சுந்தர், ஷிலி கபூர், நாகேஷ், மனோரமா (நடிகை), சங்கீதா, பிரதாபச்சந்திரன், வெண்ணிற ஆடை மூர்த்தி, அஜய் ரத்தினம், குமரிமுத்து.
கதைச்சுருக்கம்
தொகுநல்ல நண்பர்களான விஜய் (நீரஜ்), கோபி (விவேக்), சலீம், பீடா, பீமா ஆகியோர் ஒரே வகுப்பில் படித்து வருகிறார்கள். பணம்படைத்த, கர்வமுள்ள பெண்ணான ப்ரியாவிற்கு, துவக்கத்தில் விஜயுடன் மோதல் ஏற்படுகிறது. ஆனால், ப்ரியாவை விஜய் விரும்பினான். அதை நிராகரித்து, விஜயை காயப்படுத்தினாள் ப்ரியா. அதனால், பிரியாவிற்கு பாடம் புகட்ட எண்ணிய விஜயின் நண்பர்களிடமிருந்து விஜய் ப்ரியாவை காப்பாற்றுகிறான். நாளடைவில், ப்ரியாவும் விஜயை விரும்பதுவங்கினாள். ஆனால், செல்வாக்குள்ள தொழிலதிபரான ப்ரியாவின் தந்தைக்கு, தன் மகளின் காதல் விவகாரம் சற்றும் பிடிக்கவில்லை.
பின்னர், ப்ரியாவின் தந்தையை சமாளித்து அந்த காதலை நண்பர்கள் எவ்வாறு சேர்த்து வைத்தனர் என்பதே மீதிக் கதையாகும்.
ஒலிப்பதிவு
தொகுஇப்படத்தின் இசையை அமைத்தவர் பபுள் போஸ் ஆவார். வைரமுத்து மற்றும் புலமைப்பித்தன் பாடல்களின் வரிகளை எழுதினர். ஏழு பாடல்களை கொண்ட ஒலித்தொகுப்பு 1991 ஆம் ஆண்டு டி-சீரிஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.[4]
ட்ராக் | பாடல் | பாடியது | நீளம் |
---|---|---|---|
1 | ஆச்சு வெள்ளம் | மனோ. சித்ரா | 6:45 |
2 | அத்தெரி பாச்சா | மனோ. சித்ரா | 6:23 |
3 | என்னுயிரே | சித்ரா | 5:57 |
4 | என்னுயிரே | சித்ரா, சதீஷ் | 6:51 |
5 | காதல் என் பாவம் | மனோ, ஷோபா | 6:38 |
6 | காலங்களால் அழியாதது | மனோ, விஜய்ரமணி, சதீஷ், பிரபாகர் | 5:53 |
7 | வெள்ளை ரோஜாவே | சித்ரா, சதீஷ் | 6:25 |
வரவேற்பு
தொகுபடத்தின் வேகம், சில கதாபாத்திரங்கள் நல்ல விமர்சனத்தை பெற்றாலும், அறிமுக இசை அமைப்பாளரின் இசை எதிர்மறையான விமர்சனத்தை பெற்றது.[சான்று தேவை]
மேற்கோள்கள்
தொகு- ↑ "http://www.cinesouth.com". Archived from the original on 2011-09-18. பார்க்கப்பட்ட நாள் 2019-03-23.
{{cite web}}
: External link in
(help)|title=
- ↑ "http://www.rediff.com".
{{cite web}}
: External link in
(help)|title=
- ↑ "http://www.hindu.com". Archived from the original on 2006-04-15. பார்க்கப்பட்ட நாள் 2019-03-23.
{{cite web}}
: External link in
(help)|title=
- ↑ "http://music.ovi.com". Archived from the original on 2013-01-30. பார்க்கப்பட்ட நாள் 2019-03-23.
{{cite web}}
: External link in
(help)CS1 maint: unfit URL (link)|title=