ஆனந்தகிரி (Anandagiri), கிபி 14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்து சமயத் துறவியும், சமஸ்கிருத அறிஞரும் ஆவார். தமிழ்நாட்டின் சேர நாட்டுப் பகுதியைச் சேர்ந்தவர். துறவறத்திற்கு முந்தைய வாழ்க்கையில் ஜனார்தனன் என்று அறியப்பட்ட அவர், சூரியநாராயணன் என்பவரின் மகன் ஆவார். இவரது குரு சுத்தானந்தர் ஆவார். இவர் ஆதி சங்கரர் பாஷ்யம் (மூல உரை) எழுதிய உபநிடதங்கள், பகவத் கீதை மற்றும் பிரம்ம சூத்திரம் ஆகியவற்று விளக்க உரை (டீக்கா) எழுதியுள்ளார்.[1]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்தகிரி&oldid=3596918" இலிருந்து மீள்விக்கப்பட்டது