ஆனந்த் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்
ஆனந்த் இன்ஸ்டிடியூட் ஆப் ஹையர் டெக்னாலஜி (Anand Institute of Higher Technology) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னை, கேளம்பாக்கத்தில் அமைந்துள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும் . இக்கல்லூரியானது டி. கலசலிங்கத்தால் நிறுவப்பட்டது. இது கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் சகோதரி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்திற்கு டி. கலசலிங்கத்தின் மனைவி திருமதி. கே. ஆனந்தம் அம்மாள் பெயர் இடப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் ஆறு துறைகளில், இளங்கலை பொறியியல் படிப்புகளை வழங்கப்படுகின்றன, 2012-2013 ஆம் ஆண்டில் ஆனந்த் ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் நிறுவப்பட்டது. மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் தனித்தனி விடுதி வசதிகள் வழங்கப்படுகின்றன. போக்குவரத்து வசதியானது இங்கு உள்ள 40 பேருந்துகளால் வழங்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் சென்னையின் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்றுவருகின்றன.
உருவாக்கம் | 2000 |
---|---|
தலைவர் | முனைவர் கே. சிறீதரன் |
முதல்வர் | முனைவர் கே. திவாகர் |
பணிப்பாளர் | முனைவர் எஸ். அறிவழகி |
அமைவிடம் | , , 12°49′06″N 80°13′43″E / 12.81824°N 80.228509°E |
சேர்ப்பு | சென்னை ஆண்ணா பல்கலைக் கழகம். |
இந்த கல்லூரியில் 1500 பேர் அமரக்கூடிய முதன்மை விளையாட்டு அரங்கமும், 150 பேர் அமரக்கூடிய ஒரு சிறிய விளையாட்டு அரங்கமும் உள்ளது. இரண்டு விளையாட்டு அரங்கங்களும் குளிர்சாதன வசதியைக் கொண்டுள்ளன.