ஆனந்த் சிங் (கர்நாடகா அரசியல்வாதி)
கர்நாடக அரசியல்வாதி
ஆனந்த் சிங் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதியும் கர்நாடக அரசின் சுற்றுலாத்துறை அமைச்சரும் ஆவார். இவர் இரண்டு முறை கர்நாடகா சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இந்தியாவின் பணக்கார அரசியல்வாதிகளுள் ஒருவரான இவருடைய நிகர சொத்து மதிப்பு ரூ.1800 கோடியாகும்.
ஆனந்த் சிங் | |
---|---|
கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2013 | |
கர்நாடக சுற்றுலாத்துறை அமைச்சர் கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2008–2013 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதீய ஜனதா கட்சி |
வேலை | கர்நாடக அரசியல்வாதி |
தொழில்
தொகுஅவர் விஜயநகரம் (கர்நாடகம்) தொகுதியிலிருந்து பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டு கர்நாடக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
2015 ஆம் ஆண்டில், பெல்லாரி இரும்பு தாது மோசடி வழக்கில் இவர் கைது செய்யப்பட்டார். [3][4][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Karnataka 2013 ANAND SINGH (Winner) VIJAYANAGARA". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 30 May 2016.
- ↑ "Sitting and previous MLAs from Vijayanagara Assembly Constituency". elections.in. பார்க்கப்பட்ட நாள் 30 May 2016.
- ↑ "BJP MLA Anand Singh arrested over illegal ore shipping charge in the Ballari mining scam". economictimes.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 30 May 2016.
- ↑ "Karnataka: Lokayukta SIT arrests former minister Anand Singh in illegal mining case". indianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 30 May 2016.
- ↑ "Anand Singh arrested". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 30 May 2016.