விஜயநகரம் (கர்நாடகம்)
விசயநகரம் (Vijaya Nagara), இந்தியாவின், மத்திய கருநாடகா மாநிலத்தின், விசயநகர மாவட்டத்தில் உள்ளது. 13ஆம் நூற்றாண்டில் அரிகரா மற்றும் புக்கா எனும் சங்கம மரபு சகோதரர்களால், வித்யாரண்யர் என்ற அந்தண முனிவரின் துணையுடன் நிறுவப்பட்டது விசயநகரப் பேரரசு.
விசய நகரம் (கருநாடகம்) | |
---|---|
ஏமகூட மலையிலிருந்து விருபாட்சர் கோயில் வளாகம் | |
இருப்பிடம் | அம்பி, விசயநகர மாவட்டம், கருநாடகம், இந்தியா |
பகுதி | அம்பி நினைவுச் சின்னங்களின் தொகுப்பு |
வகை | தொல்லியல் களம் |
பரப்பளவு | 650 சதுர கி. மீ., |
பகுதிக் குறிப்புகள் | |
இணையத்தளம் | http://whc.unesco.org/en/asia-pacific/ |
வகை | தொல்லியல் களம் |
அளவுகோல் | i, iii, iv |
வரையறுப்பு | 1986 (10th session) |
சுட்டெண் | 241 |
உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - இந்தியா |
இந்நகரம் விசயநகரப் பேரரசின் தலைநகராக விளங்கியது. தில்லி மொகலாயப் 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் தில்லி மொகலாய பேரரசு மற்றும் தக்கானச் சுல்தானகளின் இடையறாத தாக்குதல்களாலும் 1565இல் விசயநகரப் பேரரசு வீழ்ந்த காரணத்தால், விசயநகரமும் பொலிவிழந்தது. தற்போது இந்நகரம் அம்பி எனும் பெயரால் விளங்குகிறது. தற்போது சிதலமடைந்த விசயநகரம் உலக பாரம்பரிய களங்களில் ஒன்றாக விளங்குகிறது.[1]
அமைவிடம்தொகு
துங்கபத்திரை ஆற்றின் தென்கரையில், அம்பியில் உள்ள விருபாட்சர் கோயிலை மையமாகக் கொண்டு விசயநகரம் அமைந்துள்ளது. இந்நகரத்தை சுற்றி இராமாயணத்தில் குறிப்பிட்டுள்ள கிட்கிந்தை அமைந்துள்ளது.
அருகில் உள்ள இடங்கள்தொகு
- அம்பி[2]
- ஓசுபேட்டு
- மதங்க மலை
- ஏமகுண்ட மலை
- விருபாட்சர் கோயில்
- விட்டலர் கோயில்
- கிருட்டிணர் கோயில்
- இலக்குமி நரசிம்மர் கோயில்
- சுக்கிரிவன் குகை
- கோதண்டராமர் கோயில்
- அரண்மனை தர்பார் மண்டபம்
- ராமசந்திரன் கோயில் [3]
- பாதள சிவன் கோயில்
- தாமரை மண்டபம்
- புனித குளம்
- யாணை கொட்டில் [4]
- அனகொண்டி
- கமலபுரம், தொல்லியல் அருங்காட்சியகம்
படக்காட்சிகள்தொகு
விருபாட்சர் கோயில், அம்பி
கிருட்டிணர் கோயில், அம்பி
அடிக்குறிப்புகள்தொகு
- Sosale Srinivasachar & T.S. Satyan, Hampi: The fabled capital of the Vijayanagara Empire, (Directorate of Archaeology and Museums), Govt. of Karnataka, 1995
- J.M. Fritz et al., New Light on Hampi: Recent Research at Vijayanagara, (Performing Arts Mumbai, 2001) ISBN 81-85026-53-X
- A.H. Longhurst, Hampi Ruins Described and Illustrated, (Laurier Books Ltd., 1998) ISBN 81-206-0159-9
- The Ruins of Hampi:Travel Guide ISBN 81-7525-766-0
- Raghu Rai & Usha Rai, Vijayanagara Empire: Ruins to Resurrection, New Delhi, 2014. ISBN 978-93-83098-24-8
மேற்கோள்கள்தொகு
வெளி இணைப்புகள்தொகு
- Vijayanagara Research Project பரணிடப்பட்டது 2014-02-27 at the வந்தவழி இயந்திரம்
- Archaeos – Vijayanagara Mapping Project பரணிடப்பட்டது 2008-12-21 at the வந்தவழி இயந்திரம்
- Krishna temple complex and Vittala temple complex