ஆனந்த கோத்திரர்கள்

இந்திய அரசன்

ஆனந்தர்கள் (Anandas) அல்லது ஆனந்த கோத்திரர்கள் (Ananda Gotrika) 335-425 கிபி வரை காந்தரபுரத்தை தலைநகராகக் கொண்டு கடலோர ஆந்திராவை ஆண்டனர். இவர்களின் தலைநகரம் இன்றைய குண்டூர் மாவட்டத்தில் உள்ள செஜெர்லா மண்டலத்தில் அமைந்துள்ளது.[1] ஆந்திர இசுவாகுகளின் வீழ்ச்சிக்குப் பிறகு ஆனந்த கோத்ரிகர்கள் இப்பகுதியை ஆண்டனர். மேலும் தங்களை ஆனந்த கோத்திரத்தில் இருந்து வந்ததாக உரிமை கோரினர். [2]

இவர்கள், 4 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதி மற்றும் 5 ஆம் நூற்றாண்டின் முதல் பாதி வரை செழித்து வளர்ந்ததாகத் தெரிகிறது. ஆனந்த கோத்திரர்கள் பற்றிய மூன்று பதிவுகள் மட்டுமே உள்ளன. அதில் இரண்டு செப்புத் தகடுகளும் ஒரு கல்வெட்டும் அடங்கும். [3] காந்தாரன், அத்திவர்மன், தாமதோரவர்மன் ஆகிய மூன்று அரசர்கள் மட்டுமே அறியப்படுகின்றனர். ஆனந்த கோத்திர வம்சத்தை நிறுவிய காந்தரன் தலைநகரான காந்தாரபுரத்தையும் நிறுவினார். [3] காந்தார மன்னனும் பல்லவர்களுக்கு எதிரான போர்களில் வெற்றி பெற்று அவர்களை அமராவதி பகுதியிலிருந்து விரட்டினான். [3] இந்த வம்சத்தின் அறியப்பட்ட மூன்று மன்னர்களில் மன்னர் அத்திவர்மனும் ஒருவர். அவர் விலையுயர்ந்த இரண்யகர்ப மகாதானம் (தங்க தானம்) செய்தார் . மேலும், சிவபெருமானின் தீவிர பக்தராக இருந்தார். [3] அத்திவர்மனுக்குப் பிறகு அவரது மகன் தாமதோரவர்மன் பதவிக்கு வந்தான். ஆனால் அவன் பௌத்தத்தைத் தழுவினான் [3]

ஆனந்த கோத்திரர்கள் சாலங்காயனர்களால் வீழ்த்தப்பட்டதாகத் தெரிகிறது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்த_கோத்திரர்கள்&oldid=3819757" இலிருந்து மீள்விக்கப்பட்டது