ஆனந்த போதினி

ஆனந்த போதினி 20ம் நூற்றாண்டின் முதற் பகுதியில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இந்த இதழுக்கு ஒர் ஆசிரியர் குழு பொறுப்பாக இருந்தது. இது சிறப்பான கட்டுரைகளையும், பயனாகுகிற குறிப்புகளையும் தொடர் நாவலையும், கதைகளையும் வெளியிட்டது. 1915 ஆம் ஆண்டு முதல் வெளியாகத் தொடங்கியது. நாகவேடு முனுசாமி முதலியார் இதனைத் தொடங்கினார். 1960கள் வரை வெளியானதாகத் தெரிகிறது. முதலாமாண்டு முடிவில் (1916), இதழொன்று மொத்தம் 5000 பிரதிகள் விற்பனையாவதாக ஆனந்த போதினி செய்தி வெளியிட்டது. ஆரணி குப்புசாமி முதலியார் பொன்ற எழுத்தாளர்களின் புதினங்களில் இவ்விதழில் தொடர்கதைகளாக வெளியாகின. இதற்கு போட்டியாக 1925 இல் தொடங்கப்பட்ட இதழே ஆனந்த விகடன்.

ஆனந்த போதினியின் இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்த_போதினி&oldid=3261408" இலிருந்து மீள்விக்கப்பட்டது