ஆபிரகாம் விருத்தகுளங்கரா

இந்திய தலைமைப்பேராயர் (1943-2018)

ஆபிரகாம் விருத்தகுளங்கரா (Abraham Viruthakulangara, மலையாளம்: അബ്രഹാം വിരുതകുളങ്ങര) என்பவர் நாக்பூரின் இந்திய பேராயர் ஆவார்.[1] மகாராட்டிர பிராந்திய ஆயர்கள் பேரவையின் தலைவராக இருந்தார்.

மரியாதைக்குரிய
ஆபிரகாம் விருத்தகுளங்கரா
நாக்பூர் உரோமனிய கத்தோலிக்க உயர் மறைமாவட்டம்
உயர் மறைமாவட்டம்நாக்பூர் உரோமனிய கத்தோலிக்க உயர் மறைமாவட்டம்
ஆட்சி பீடம்நாக்பூர்
நியமனம்17சனவரி 1998
ஆட்சி துவக்கம்22 ஏப்ரல் 1998
ஆட்சி முடிவு19 ஏப்ரல் 2018
முன்னிருந்தவர்லியோபார்ட் டிசோசா
பின்வந்தவர்எலியாசு சோசப் கோன்சால்வுசு
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடு28 அக்டோபர் 1969
ஆயர்நிலை திருப்பொழிவு13 சூலை 1977
பேராயர் யூசின் லூயிசு டிசோசா-ஆல்
பிற தகவல்கள்
பிறப்பு(1943-06-05)5 சூன் 1943
கேரளம், பிரித்தானிய இந்தியா
இறப்பு19 ஏப்ரல் 2018(2018-04-19) (அகவை 74)
புது தில்லி, இந்தியா
குடியுரிமைஇந்தியர்
படித்த இடம்டாக்டர். அரி சிங் கோர் பல்கலைக்கழகம்

வாழ்க்கை தொகு

ஆபிரகாம் 1943 ஆம் ஆண்டு சூன் 5 ஆம் தேதி அன்று கேரளாவில் பிறந்தார்.[2] நாக்பூரில் உள்ள தூய சார்லசு பயிற்சிப்பள்ளியில் தனது படிப்பை முடித்தார். மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாகர் பல்கலைக்கழகத்தில் இந்தியில் இளங்கலை முடித்தார். இவர் இறையியலில் இளநிலைப் பட்டமும் பெற்றார்.

ஆபிரகாம் 28 அக்டோபர் 1969 அன்று கத்தோலிக்க பாதிரியாராக நியமிக்கப்பட்டார்.[2]

பேராயர் தொகு

ஆபிரகாம் 1977 ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் தேதி கந்த்வாவின் ஆயராக நியமிக்கப்பட்டார். இவர் 1998 சனவரி 17 அன்று இந்தியாவின் நாக்பூரின் பேராயராக நியமிக்கப்பட்டார். அவர் ஒரு ஆயராக நியமிக்கப்பட்டபோது எட்டு ஆண்டுகள் பாதிரியாராக இருந்தார், மேலும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக எளிமையான வாழ்க்கையுடன் ஆயராக இருந்தார்.[2]

இறப்பு தொகு

19 ஏப்ரல் 2018 அன்று (நள்ளிரவு - அதிகாலை 1 மணியளவில்) புது தில்லியில் நடைபெற்ற ஆயர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு மாரடைப்பால் மரணமடைந்தார். [1] [3] [2]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Former Bishops and Archbishops", nagpurarchdiocese.org, பார்க்கப்பட்ட நாள் 2024-01-23
  2. 2.0 2.1 2.2 2.3 "Archbishop Abraham Viruthakulangara [Catholic-Hierarchy]", www.catholic-hierarchy.org, பார்க்கப்பட்ட நாள் 2024-01-23
  3. "Archbishop Abraham Viruthakulangara | Archbishop of Nagpur Archdiocese Abraham Viruthakulangara | Ucanews". பார்க்கப்பட்ட நாள் 2017-06-19.