ஆப்கானித்தான் இசுலாமிய ஒற்றுமைப் புரட்சி அமைப்பு

சூரா என அழைக்கப்படும் ஆப்கானித்தான் இசுலாமிய ஒற்றுமைப் புரட்சி அமைப்பு (Revolutionary Council of Islamic Unity of Afghanistan, தாரி மொழி: Shura-i Engelab-i Ettefaq-i Islami Afghanistan, சூரா-இ எடீஃபாக்-இ-இஸ்லாமி ஆப்கானிஸ்தான்) ஆப்கானித்தானில் 1979 ஆம் ஆண்டு தோன்றிய அமைப்பாகும். ஆப்கானிஸ்தானின் இடது சாரி அரசை எதிர்ப்பதற்காக இது உருவாக்கப்பட்டது. இதை வழிநடத்தியவர் சையது அலி பெஹஸ்தி ஆவார்.[1] இவ்வமைப்பிற்கு அரசியல் மற்றும் போராளிக் குழுக்கள் உண்டு. இவ்வமைப்பானது ஆப்கானிஸ்தானின் கசாரா பகுதியில் சோவியத் ஒன்றியம் ஆதரவு அதிகாரிகளை நீக்கிவிட்டு கசாரா மக்களை நியமித்தது. 1983 ஆம் ஆண்டு கசாரா பகுதியின் 60% மக்களை இக்குழு ஆட்சி செய்தது.[2] இக்குழுவானது முதலில் தெஹ்ரான் எட்டு அமைப்பில் இருந்த கசாரா புரட்சி இயக்கத்தை நடத்தியது.[3]

ஆப்கானித்தான் இசுலாமிய ஒற்றுமைப் புரட்சி அமைப்பு
شوراء انقلاب اتفاق اسلامی افغانستان
சூரா-இ எடீஃபாக்-இ-இஸ்லாமி ஆப்கானிஸ்தான்
தலைவர்சையது அலி பெஹஸ்தி
தொடக்கம்செப்டம்பர் 1979
கலைப்பு1989
இணைந்ததுஹெஸ்பெ வாஹ்தத்
கொள்கைகசாரா
பழைமைவாதம்
மரபுவாதம்
சமயம்சியா இசுலாம்
தேசியக் கூட்டணிதெஹ்ரான் எட்டு (1987இலிருந்து)

இதையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு