ஆப்கானிஸ்தானில் குழந்தைத் திருமணம்

சிறுவர் மணம்

ஆப்கானிஸ்தானில் குழந்தைத் திருமணம் (Child marriage in Afghanistan) ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் கூற்றுப்படி, குழந்தைத் திருமணம் என்பது "18 வயதிற்கு முன்பே முறையான திருமணம் அல்லது முறையற்ற முறையில் இணைத்தல்" ஆகும். மேலும் இது ஆண்களை விட அதிகமான பெண்களை பாதிக்கிறது.[1] ஆப்கானித்தானில், 57% பெண்கள் 19 வயதிற்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர். [2] பெண்கள் திருமணம் செய்ய மிகவும் பொதுவான வயது 15 மற்றும் 16. [3] பாலின இயக்கவியல், குடும்ப அமைப்பு, கலாச்சாரம், அரசியல், பொருளாதார உணர்வுகள்/சித்தாந்தங்கள் போன்ற காரணிகள் அனைத்தும் ஒரு பெண் இளம் வயதில் திருமணம் செய்துகொள்வதை தீர்மானிப்பதில் பங்கு வகிக்கிறது.[4]

குழந்தைத் திருமண நடைமுறையானது, பெண்களுக்கு கல்வியையும், திறமையையும் பெற இயலாமை போன்ற தீங்கு விளைவிக்கும் விளைவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.[5] இவ்வகையான திருமண்க்கள் மூலம் பெண்கள் உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் அவர்களின் உடல் பெரும்பாலும் பிரசவத்திற்காக தயாராவதில்லை. இதன் விளைவாக தாயும் அவரது குழந்தை இருவருக்கும் உணர்ச்சி, மன, உடல் ரீதியான அதிர்ச்சி ஏற்படுகிறது.[4]

குழந்தைத் திருமணம் தொடர்பான சட்டங்கள் தொகு

ஆப்கானித்தான் அரசுச் சட்டம் தொகு

ஆப்கானித்தான் குடிமைச் சட்டம் பிரிவு 40 இன் படி, "திருமணம் என்பது ஒரு குடும்பத்தை நிறுவுவதற்கான ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான ஒப்பந்தமாகும்."[2] பிரிவு 70 சட்டப்பூர்வ திருமண வயதை பெண்களுக்கு 16 ஆகவும் ஆண்களுக்கு 18 ஆகவும் நிர்ணயிக்கிறது; பிரிவு 71 (துணைப்பிரிவு 1) 16 வயதுக்குட்பட்ட பெண்ணின் திருமண உரிமையை தனது தந்தை அல்லது பாதுகாவலருக்கு வழங்குகிறது. மேலும் 15 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கான திருமணங்கள் எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்கப்படாது.[2] குடிமைச் சட்டம் நிறுவப்பட்ட போதிலும், பிராந்திய பழக்கவழக்கங்கள் தேசிய சட்டத்தையும், இசுலாமியச் சட்ட முறைமையை விட முன்னுரிமை பெறுகின்றன. குடிமைச் சட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள குறைபாடுகளால், குழந்தை திருமணங்கள் இன்னும் அதிகமாக நடைபெறுகின்றன.[6] [7]

புதிய சட்டங்கள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் அதே வேளையில், ஐநா வளர்ச்சி திட்டத்தின் வருடாந்திர பாலின சமத்துவமின்மைக் குறியீடானது, உலகில் பெண் சமத்துவத்திற்கான ஆறாவது மோசமான நாடாக ஆப்கானித்தானை வைக்கிறது.[8] ஆப்கானித்தான் சுதந்திர மனித உரிமைகள் ஆணையத்தின் புள்ளிவிவரங்கள் ஆப்கானித்தானில் மொத்த திருமணங்களில் 60-80% கட்டாய /அல்லது சிறுவயது திருமணமாகும். [9]

குழந்தைத் திருமணத்திற்கான காரணங்கள் தொகு

இழப்பீடு தொகு

ஒரு குற்றவாளியின் குடும்பத்தைச் சேர்ந்த பெண் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு வேலைக்காரியாக அல்லது மணப்பெண்ணாக வழங்கப்படும்பாதல் என்ற இழப்பீட்டு முறையின் மூலம் இரண்டு குடும்பங்கள் தங்கள் குடும்பத்தின் பெண் உறுப்பினர்களை பரிமாறிக் கொள்ள ஒப்புக்கொள்கிறார்கள். பெரும்பாலும் திருமண செலவை ஈடுசெய்ய அல்லது குடும்ப உறவுகளை வலுப்படுத்த இது பின்பற்றப்படுகிறது. இதன் மூலம் குற்றங்கள் தடுக்கப்படுகிறது.[10] [11] [11] பெரிய கடன்களை திருப்பிச் செலுத்துவதற்காகவும் சிறுமிகள் திருமணங்களில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். [7]

உடல்நலம் தொகு

ஆரம்பகால குழந்தை திருமணமானது பெண்ணின் உடல்நலம் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும். ஊட்டச்சத்து குறைபாடு, துன்புறுத்தல், எச்.ஐ.வி தொற்று ஆகியவை ஆரம்பகால திருமணத்துடன் தொடர்புடைய சில உடல்நலக் குறைபாடுகளாகும்.[12] பிரசவம் மற்றும் கர்ப்பத்தினால் இறக்கும் அபாயம் 15 முதல் 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு வயது முதிர்ந்த பெண்களை விட இரண்டு மடங்கு அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.[13] ஏழ்மையான சுகாதாரப் பாதுகாப்பு உள்ள சமுதாயங்களில் குழந்தை திருமணங்கள் நடக்கின்றன. இது கர்ப்ப சிக்கல்கள் மற்றும் தாய்வழி இறப்பு விகிதங்களை அதிகமாக்குகிறது.[14]

இதையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Child protection from violence, exploitation and abuse: Child marriage. UNICEF. {{cite web}}: Missing or empty |title= (help); Missing or empty |url= (help)
  2. 2.0 2.1 2.2 Bahgam, S; Mukhatari (2004). "Study on Child Marriage in Afghanistan". Medica Mondiale: 1–20. http://www.medicamondiale.org/fileadmin/content/07_Infothek/Afghanistan/Afghanistan_Child_marriage_medica_mondiale_study_2004_e.pdf. பார்த்த நாள்: 15 March 2014. 
  3. Riphenburg, Carol (May–June 2004). "Post-Taliban Afghanistan: Changed Outlook for Women?". Asian Survey 44 (3): 401–422. doi:10.1525/as.2004.44.3.401. 
  4. 4.0 4.1 Smith, Deborah (2009). "Decisions, Desires and Diversity: Marriage Practices in Afghanistan". Afghanistan Research & Evaluation Unit (AREU). 
  5. Smith, Deborah (2009). "Decisions, Desires and Diversity: Marriage Practices in Afghanistan". Afghanistan Research & Evaluation Unit (AREU). Smith, Deborah (2009). "Decisions, Desires and Diversity: Marriage Practices in Afghanistan". Afghanistan Research & Evaluation Unit (AREU).
  6. Smith, Deborah (2009). "Decisions, Desires and Diversity: Marriage Practices in Afghanistan". Afghanistan Research & Evaluation Unit (AREU). Smith, Deborah (2009). "Decisions, Desires and Diversity: Marriage Practices in Afghanistan". Afghanistan Research & Evaluation Unit (AREU).
  7. 7.0 7.1 "Early Marriage in Afghanistan". Women and Children Legal Research Foundation. 2008. 
  8. Johnson, Kay. "Child bride's torture renews Afghan rights worries". http://newsinfo.inquirer.net/122927/child-brides-torture-renews-afghan-rights-worries. 
  9. "Afghanistan: The tribulations of child-bearing children". Integrated Regional Information Networks (IRIN). பார்க்கப்பட்ட நாள் 24 February 2012.
  10. "Early Marriage in Afghanistan". Women and Children Legal Research Foundation. 2008. "Early Marriage in Afghanistan". Women and Children Legal Research Foundation. 2008.
  11. 11.0 11.1 "Afghanistan: Marriage". Landinfo: 1–30. 2011. 
  12. Hampton, Tracy (2010). "Child Marriage Threatens Girls' Health". The Journal of the American Medical Association 304 (5): 509–510. doi:10.1001/jama.2010.1009. பப்மெட்:20682925. 
  13. Jain, Saranga; Kurz, Kathleen. "New Insights on Preventing Child Marriage" (PDF). The United States Agency for International Development. Archived from the original (PDF) on 22 March 2012. பார்க்கப்பட்ட நாள் 24 February 2012.
  14. Raj, A. (7 October 2010). "When the mother is a child: the impact of child marriage on the health and human rights of girls". Archives of Disease in Childhood 95 (11): 931–935. doi:10.1136/adc.2009.178707. பப்மெட்:20930011.