ஆப்பிரிக்க திரிசூல வெளவால்

ஆப்பிரிக்க திரிசூல வெளவால்
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்கு
பிரிவு:
முதுகுநாணி
வகுப்பு:
பாலூட்டி
வரிசை:
கைராப்பிடிரா
குடும்பம்:
கிப்போசிடெரிடே
பேரினம்:
டிரையானோப்ஸ்
இனம்:
டி. அபெர்
இருசொற் பெயரீடு
டிரையானோப்ஸ் அபெர்
பீட்டர்சு, 1877
வேறு பெயர்கள்
  • டிரையானோப்ஸ் பெர்சிகசு அபெர் பீட்டர்சு, 1877
  • டிரையானோப்ஸ் பெர்சிகசு மஜுசுகுலசு ஆலென் மற்றும் ப்ரோசெட், 1968

ஆப்பிரிக்கத் திரிசூல வெளவால் (African trident bat) (டிரையானோப்ஸ் அபெர்) என்பது ஆப்பிரிக்காவில் காணப்படும் வெளவால் இனங்களில் ஒன்றாகும்.

வகைபிரித்தல் மற்றும் சொற்பிறப்பியல் தொகு

1877ல் ஜெர்மன் விலங்கியல் நிபுணர் வில்ஹெல்ம் பீட்டர்ஸ் இதனை ஓர் புதியச் சிற்றினமாக விவரித்தார்.[2]1963 முதல் 2009 வரை இது ரூஃபஸ் திரிசூல வெளவாலின் துணைச் சிற்றினமாக இது கருதப்பட்டது. புறத்தோற்றம் மற்றும் மரபணு பகுப்பாய்வுகள் அடிப்படையில் இது தனிச்சிற்றினமாக வகைப்படுத்தப்பட்டது.[3] இதன் சிற்றினப் பெயரான அபெர்" என்பது லத்தீன் மொழியில் "ஆப்பிரிக்கா" என்று பொருள்.

உயிரியல் மற்றும் சூழலியல் தொகு

இது இரவாடுதல் வகையினைச் சார்ந்தது. குகைகள் அல்லது கைவிடப்பட்ட சுரங்கங்கள் போன்றவற்றில் பகல் நேரத்தில் இவை தங்கும். இது கூட்டமைப்பாக வாழும் இனம் என்பதால், கூட்டமைப்பு ஒன்றில் அரை மில்லியன் நபர்களைக் கொண்டிருக்கலாம். [1]

வரம்பு மற்றும் வாழ்விடம் தொகு

இந்தப் பேரினத்தில் ஆப்பிரிக்காவில் காணப்படும் ஒரே ஒரு சிற்றினம் இதுவாகும். இது எரித்திரியா, மொசாம்பிக், தென்மேற்கு காங்கோ மற்றும் வடமேற்கு அங்கோலாவில் காணப்படுவது ஆய்வுகள் மூலம் தெரிகிறது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Monadjem, A.; Shapiro, J. (2017). "Triaenops afer". The IUCN Red List of Threatened Species 2017: e.T81081036A95642225. doi:10.2305/IUCN.UK.2017-2.RLTS.T81081036A95642225.en. 
  2. Peters, W. (1876). "Mittheilung über eine kleine Sammlung von Säugethieren, welche der Reisende Hr. JM Hildebrandt aus Mombaca in ostafrica eingesand hat". Monatsberichte der Königlichen Preussische Akademie des Wissenschaften zu Berlin 1876: 913. https://biodiversitylibrary.org/page/35330317. 
  3. 3.0 3.1 Benda, P.; Vallo, P. (2009). "Taxonomic revision of the genus Triaenops (Chiroptera: Hipposideridae) with description of a new species from southern Arabia and definitions of a new genus and tribe". Folia Zoologica 58 (1). http://www.ivb.cz/folia_zoologica/archive/58_1-45.pdf. பார்த்த நாள்: 2018-03-10.