ஆப்பு வால் பச்சைப் புறா

பறவை இனம்
ஆப்பு வால் பச்சைப் புறா
ஆண் தனௌல்டி, இந்தியாவில்
மியான்மரில் பெண் புறா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
கொலும்பிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
தெரெரான்
இனம்:
தெ. பெனுபெனுரசு
இருசொற் பெயரீடு
தெரெரான் பெனுபெனுரசு
(விகோர்சு, 1832)

ஆப்பு வால் பச்சைப் புறா (Wedge tailed green pigeon) அல்லது கோக்லா பச்சைப் புறா (தெரெரான் பெனுபெனுரசு) என்பது கொலம்பிடே குடும்பத்தில் உள்ள பறவை சிற்றினமாகும்.

விளக்கம்

தொகு
 

ஆப்பு வால் பச்சைப் புறா, பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் ஆப்பு வடிவ வாலினைக் கொண்டது. தலைப்பகுதி ஆரஞ்சு செம்பழுப்பு நிறத்துடனும் முதுகு வேறுபாட்டுடன் கூடிய அரக்கு நிறத்தில் காணப்படும்.

ஆப்பு வால் பச்சைப் புறா, இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்காசியாவில் காணப்படுகிறது. இது வங்காளதேசம், பூடான், கம்போடியா, இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், நேபாளம், தாய்லாந்து , திபெத் மற்றும் வியட்நாம் முழுவதும் பரவியுள்ளது.

இதனுடைய இயற் வாழிடம் மித வெப்பமண்டல வெப்பமண்டல தாழ் நில வனப்பகுதி மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்ப மண்டல மலைச் சூழற்றொகுதிகள்.ஆகும்.[2]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆப்பு_வால்_பச்சைப்_புறா&oldid=4054334" இலிருந்து மீள்விக்கப்பட்டது