ஆம்பல் பண் என்பது ஒருவகைப் பண்ணாகும்[இராகம்].[1] சங்க இலக்கியங்களில் இப்பண்ணைப் பற்றிய செய்திகள் காணப் பெறுகின்றன. முல்லை நில மக்களாகிய கோவலர்கள் ஆம்பல் பண்ணை இசைக்கின்றனர். தட்டை, தண்ணுமை போன்ற தாள இசைக்கருவிகளுடன் மாலைக் காலத்தில் ஆம்பல் பண்ணை இசைத்து மகிழ்கின்றனர் என நற்றிணை கூறுகிறது.

பசுக்களை ஓட்டி வரும் இடையர்களின் ஆம்பல் பண்ணுடன் சேர்ந்து யாழில் செவ்வழிப் பண்ணுக்கு மெருகூட்டினார்கள் என்பதை

என்று அகநானூறு குறிப்பிடுகின்றது. மேலும் ஐங்குறுநூறு (215 : 3-5), குறிஞ்சிப்பாட்டு (221-222)ஆகியவற்றிலும் சிலப்பதிகாரத்திலும் ஆம்பல் பண் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

மேற்கோளும் குறிப்புகளும்

தொகு
  1. "இசைக்கலை". பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 14, 2012.
  2. நற்றிணை : 123: 10
  3. அகநானூறு: 214: 10 - 11
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆம்பல்_பண்&oldid=1393581" இலிருந்து மீள்விக்கப்பட்டது