ஆயன்குளம், தென் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம், இராதாபுரம் ஊராட்சி ஒன்றியம், முதுமொத்தன்மொழி ஊராட்சியில் அமைந்துள்ளது. இது திசையன்விளைக்கு தெற்கே 5.2 கிலோ மீட்டர் தொலைவிலும்; இராதாபுரத்திற்கு வடகிழக்கே 32 கிலோ மீட்டர் தொலைவிலும்; திருநெல்வேலிக்கு தென்கிழக்கே 61.4 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இப்பகுதி மானாவாரி, தரிசு நிலம் என்பதால் முருங்கை அதிகமாகப் பயிரிடப்படுகிறது.

ஆயன்குளம் அதிசயக் கிணறு

தொகு

ஆயன்குளம் கிராமத்தில் மாபெரும் வெள்ளத்தையும் உள்வாங்கும் ஆற்றல் கொண்ட அதிசயக் கிணறு உள்ளது. 10 & 11 டிசம்பர் டிசம்பர் 2023 நாட்களில் பெய்த கன மழையில் இக்கிணறு 12 டிசம்பர் 2023 அன்று நிரம்பியது. [1]சென்னை இந்தியத் தொழில் நுட்பக் கழக ஆராய்ச்சியாளர்கள் இக்கிணற்றை சோதனை செய்தனர். சோதனை முடிவில் இக்கிணற்றின் அடிப்பகுதி மட்டுமல்லாமல், அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் சுண்ணாம்புக் கற்களால் ஆனது என கண்டுபிடித்தனர். மழைக் காலங்களில் நீர் கிணற்றின் அடியில் பட்டவுடன் சுண்ணாம்புக் கற்கள், பிராணவாயுடன் வினைபுரிந்து, சுண்ணாம்புக் கற்களில் ஓட்டைகள் விழுந்து குகைகள் போன்ற பெரிய அமைப்புகள் உருவாக்கியதால் வெள்ள நீரை தேங்கும் அளவிற்கு உள்ளது எனத்தெரிவித்தனர்.

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயன்குளம்&oldid=3850324" இலிருந்து மீள்விக்கப்பட்டது