திசையன்விளை

திசையன்விளை பேரூராட்சி

திசையன்விளை (ஆங்கிலம்:Thisaiyanvilai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாலுகா ஆகும்.இது ஒரு சிறப்புநிலை பேரூராட்சி ஆகும்.திருநெல்வேலி மாவட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் திசையன்விளை ஒன்றாகும். இது தூத்துக்குடி மாவட்டத்தின் எல்லையை ஒட்டியுள்ளது.

திசையன்விளை
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
வட்டம் திசையன்விளை
அருகாமை நகரம் திருநெல்வேலி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்களவைத் தொகுதி திருநெல்வேலி
மக்களவை உறுப்பினர்

எஸ். ஞானதிரவியம்

சட்டமன்றத் தொகுதி ராதாபுரம்
சட்டமன்ற உறுப்பினர்

எம். அப்பாவு (திமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

23,702 (2011)

2,187/km2 (5,664/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 10.84 சதுர கிலோமீட்டர்கள் (4.19 sq mi)
குறியீடுகள்

அமைவிடம்

தொகு

திசையன்விளை தாலுகா, திருநெல்வேலியிலிருந்து 62 கி.மீ. தொலைவில் உள்ளது. நாங்குநேரி தொடருந்து நிலையம் இதற்கு 32 கி.மீ. தொலைவில் உள்ளது. அருகமைந்த ஊர்கள் உடன்குடி 25 கி.மீ.; சாத்தான்குளம் 13 கி.மீ.; கூடங்குளம் 34 கி.மீ.; உவரி 7 கி.மீ. ஆகும்.

இவ்வூர், தூத்துக்குடி மாவட்டத்தின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

தொகு

10.84 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 147 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி இராதாபுரம் (சட்டமன்றத் தொகுதி), திருநெல்வேலி மக்களவைத் தொகுதி ஆகியவற்றிற்கு உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரவல்

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 5,811 வீடுகளும், 23,702 மக்கள்தொகையும் கொண்டது.[4] [5]

ஊராட்சிகள்

தொகு
  1. கோவங்குளம்
  2. குமாரபுரம்.
  3. திசையன்விளை.
  4. அப்புவிளை.
  5. முதுமொத்தன்மொழி.
  6. உருமாங்குளம்.
  7. கரைச்சுத்து புதூர்.
  8. கரைச்சுத்து உவரி.
  9. குட்டம்.
  10. ராமகிருஷ்ணாபுரம்.
  11. சடையநேரி.
  12. இட்டமொழி.
  13. கஸ்துரிரெங்கபுரம்.
  14. கோட்டைகருங்குளம்.
  15. விஜயநாராயணம்.

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. திசையன்விளை பேரூராட்சியின் இணையதளம்
  4. திசையன்விளை பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. Thisayanvilai Population Census 2011

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=திசையன்விளை&oldid=4147666" இலிருந்து மீள்விக்கப்பட்டது