ஆயிசா ஓமர்
ஆயிசா ஓமர் (ஆங்கிலம்: Ayesha Omer) இவர் ஒரு பாக்கித்தானைச் சேர்ந்த ஒரு நடிகையும், விளம்பர மாதிரியும், பாடகியும் மற்றும் ஓவியரும் ஆவார். புல்பூலேவில் கூப்சுரத் [2] லேடீஸ் பார்க் என்றத் திரைப்படத்தில் நடாஷா,[3] ஜிந்தகி குல்சார் ஹை படத்தில் சாரா,[4] தன்ஹாயில் அர்சூ மற்றும் தில் அப்னா அவுர் ப்ரீத் பராய்[5] படத்தில் அலீனா என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக இவர் நன்கு அறியப்படுகிறார். அவர் பாக்கித்தானின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.[6] அவர் பாக்கித்தான் தொலைக்காட்சியின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர் மற்றும் பெரும்பாலும் பாக்கித்தானில் ஒரு "ஸ்டைல் ஐகானாக" கருதப்படுகிறார்.[7][8][9] 2019 ஆம் ஆண்டில், வார்சி சர்வதேச அமைப்பால் தம்கா-இ-ஃபக்ர்-இ-பாகிஸ்தான் (பாகிஸ்தானின் பெருமை) என்ற விருது அவருக்கு வழங்கப்பட்டது.[10][11]
ஆயிசா ஓமர் | |
---|---|
ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆயிசா ஓமர் | |
தாய்மொழியில் பெயர் | عائشہ عمر |
பிறப்பு | 12 அக்டோபர் 1981 லாகூர், பஞ்சாப் (பாக்கிஸ்தான்), பாக்கித்தான் |
தேசியம் | பாகிஸ்தானியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | தேசிய கலைக் கல்லூரி |
பணி | நடிகர், மாதிரி, பாடகர், ஓவியர் |
செயற்பாட்டுக் காலம் | 2000–தற்பொழுதுவரை |
துணைவர் | அசவர் ரஹ்மான் (2016–19)[1] |
2012 ஆம் ஆண்டில், அவர் தனது முதல் தனிப்பாடலான "சல்தே சல்தே" மற்றும் "காமோஷி" ஆகியவற்றை வெளியிட்டார், இது பாக்கித்தானில் வணிகரீதியான வெற்றியாக இருந்தாலும், விமர்சகர்களிடமிருந்து கலவையான எதிர்வினையை சந்தித்தது. ஓமர் சிறந்த தனிப்பாடலுக்கான லக்ஸ் ஸ்டைல் விருதை வென்றார்.[12] 2015 ஆம் ஆண்டில் வெற்றிகரமான காதல்-நகைச்சுவைத் திரைப்படமான கராச்சி சே லாகூர் மூலம் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார், அதைத் தொடர்ந்து யல்கார் என்ற போர் சம்பந்தமான படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.[13]
ஆரம்பகால வாழ்க்கை
தொகுஓமர் பாக்கித்தானின் லாகூரில் பிறந்தார்.[14] அவரது தந்தை இறந்தபோது அவருக்கு ஒரு வயது, அவரது தாயார் ஓமரையும் அவரது சகோதரரையும் ஒற்றை பெற்றோராக வளர்த்தார். அவர் தனது குழந்தைப் பருவத்தை '' கடினமானது '' மற்றும் '' சுயாதீனமானது '' என்று விவரித்தார்.[15] அவர் லாகூர் இலக்கணப் பள்ளியில் பயின்றார், மேலும் இளங்கலை மற்றும் முதுநிலை பட்டங்களுக்காக தேசிய கலைக் கல்லூரிக்குச் சென்றார்.[15] பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் போது, இணை பாடத்திட்ட நடவடிக்கைகளில் பங்கேற்று நாடகங்கள் மூலம் நடனத்தைக் கற்றுக்கொண்டார்.
தொழில்
தொகுவிளம்பர மாதிரி
தொகுஓமர் ஒரு விளம்பர மாதிரியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். குர்குரே, ஹார்பிக், காப்ரி, பான்டேன் மற்றும் ஸோங் போன்ற பல விளம்பரங்களில் அவர் தோன்றியுள்ளார். ஓமர் முதன்முதலில் தனது எட்டு வயதில் பாக்கித்தான் தொலைக்காட்சியில் மேரே பச்ச்பன் கே டின் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.[16] பின்னர் அவர் சி.என்.பி.சி பாகிஸ்தானில் காலை நிகழ்ச்சியான யே வக் ஹை மேரா, பிரைம் தொலைக்காட்சியில் ரிதம் மற்றும் ஏ.ஆர்.ஒய் சுயாக்கில் ஹாட் சாக்லேட் ஆகியவற்றை தொகுத்து வழங்கினார். 2018 ஆம் ஆண்டில், நியூயார்க் பேஷன் வீக்கில் பாக்கித்தானின் அழகு சாதனமான மேபெலைனின் செய்தித் தொடர்பாளராக பங்கேற்றார்.[17]
ஓவியம்
தொகுஎன்.சி.ஏ- என்ற கல்லூரியில் இவர் ஒரு நுண்கலை பட்டதாரியாவார். இவர் நடிப்பு மற்றும் விளம்பரங்களை தோன்றுவதற்கு முன்பே, ஓவியம் மற்றும் பாடுவது அவரது முதல் ஆர்வங்கள் மற்றும் தொழில் தேர்வுகள் என்று கூறினார்.[18]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுடிசம்பர் 2015 இல், ஓமரும் அவரது இணை நடிகர் அஸ்ஃபர் ரெஹ்மானும் ஒரு சாலை விபத்தை சந்தித்தனர். விபத்து நடந்தபோது நடிகர்கள் கராச்சியில் இருந்து ஐதராபாத் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.[19] ஒரு வட்டாரத்தின் படி, மற்றொரு வாகனம் அவர்களின் காரில் மோதியது, இதனால் கார் சாலையில் இருந்து விலகி ஒரு பள்ளத்தில் விழுந்தது. காயத்திலிருந்து மீண்ட பிறகு, ஓமர் ஊடகங்களிடம் கூறினார்:
"என் வாழ்நாள் என் கண்களுக்கு முன்னால் பறந்து கொண்டிருந்தது. நான் ஒரு சரக்கு வாகனம் மோதுவதற்காக என்னுடைய இருக்கையை பிடித்தபடி காத்திருந்தேன்" [20]
குறிப்புகள்
தொகு- ↑ https://www.thenews.com.pk/magazine/instep-today/82981-Ayesha-Omar-and-Azfar-Rehman-injured-in-car-accident
- ↑ "Bulbulay Cast & Crew". TV.com.pk. பார்க்கப்பட்ட நாள் 6 January 2016.
- ↑ "Ladies Park Cast & Crew". பார்க்கப்பட்ட நாள் 6 January 2016.
- ↑ "Zindagi Gulzar Hai (2012–2013) Series Cast & Crew". IMDb. பார்க்கப்பட்ட நாள் 6 January 2016.
- ↑ "Dil Apna Preet Parai Urdu 1 Drama Serial". TV.com.pk. Archived from the original on 25 ஆகஸ்ட் 2017. பார்க்கப்பட்ட நாள் 6 January 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Top 10 Pakistani Actresses and Female Models 2016". https://superwebportal.com/top-10-pakistani-actresses-and-female-models-2015/. பார்த்த நாள்: 2018-03-17.
- ↑ "Pakistani films successfully attracting people towards cinemas: Ayesha - Entertainment - Dunya News". https://dunyanews.tv/en/Entertainment/432724-Pakistani-films-successfully-attracting-people-towards-cinemas-Ayesha. பார்த்த நாள்: 2018-04-29.
- ↑ "Style Icon: Ayesha Omar - The Express Tribune". https://tribune.com.pk/story/535133/style-icon-ayesha-omar/. பார்த்த நாள்: 2018-03-18.
- ↑ "Top 10 Highest Paid Pakistani Actresses/Models 2017 | BestStylo.com". www.beststylo.com (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2019-10-09. பார்க்கப்பட்ட நாள் 2018-03-17.
- ↑ "Ayesha Omar receives Tamgha-e-Fakhr-e-Pakistan award". Daily Pakistan Global (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-23.
- ↑ "After Mehwish Hayat, Ayesha Omar trolled for receiving 'Tamgha-e-Fakhr-e-Pakistan'". The Express Tribune (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-03-23.
- ↑ "Haters will always hate, says Ayesha Omar". The Express Tribune (Group work). http://tribune.com.pk/story/574044/haters-will-always-hate/. பார்த்த நாள்: 30 December 2014.
- ↑ "Yalghaar's new poster features Ayesha Umer in an intense look - Entertainment - Dunya News". dunyanews.tv. http://dunyanews.tv/en/Entertainment/390361-Yalghaars-new-poster-features-Ayesha-Umer-in-an-i. பார்த்த நாள்: 2018-03-17.
- ↑ "Ayesha Omer Height, Weight, Age, Affairs, Biography & More » StarsUnfolded". StarsUnfolded (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-07.
- ↑ 15.0 15.1 "Ayesha Omar - BOLD & BADASS | Cover Story - MAG THE WEEKLY". www.magtheweekly.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-07.
- ↑ "Style Icon: Ayesha Omar". The Express Tribune (Sidrah Moiz Khan). http://tribune.com.pk/story/535133/style-icon-ayesha-omar/. பார்த்த நாள்: 30 December 2014.
- ↑ "Ayesha Omar to attend New York Fashion Week". www.pakistantoday.com.pk (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-03-18.
- ↑ Saadia Qamar (30 November 2010), "Ayesha Omar: The adorable, ambitious artist", The Express Tribune. Retrieved 7 October 2018.
- ↑ "Ayesha Omar, Azfar Rehman injured in car accident near Karachi - The Express Tribune" (in en-US). The Express Tribune. 2015-12-18. https://tribune.com.pk/story/1012261/ayesha-omar-azfar-rehman-injured-in-car-accident-near-karachi/.
- ↑ "A brush with death: Ayesha Omar, Azfar Rehman recount horrific car crash - The Express Tribune" (in en-US). The Express Tribune. 2016-01-28. https://tribune.com.pk/story/1035571/a-brush-with-death-ayesha-omar-azfar-rehman-recount-horrific-car-crash/.