ஆயுத கத்தி
ஆயுத கத்தி ( ஆய்த கத்தி, Ayudha katti) கர்நாடகாவின் குடகு பகுதியைச் சார்ந்த கொடவா மக்களின் ஓர் உள்நாட்டு போர் ஆயுதம் மற்றும் கருவியாகும். இந்த ஆயுத கத்தியானது அடர்த்தியான புதர்காடுகளை அழிக்கும் கருவியிலிருந்து மேம்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்டதாகும். பெரும்பாலான கத்திகள் போலல்லாமல் ஆயுத கத்தி உறை இல்லாமல் அணியப்படுவதாகும்.
ஆயுத கத்தி | |
---|---|
ஆயுத கத்தியின் வரைபடம். | |
வகை | அகன்ற தகடு |
அமைக்கப்பட்ட நாடு | குடகு |
பயன்பாடு வரலாறு | |
பயன் படுத்தியவர் | குடகு மக்கள் |
போர்கள் | Yes |
அளவீடுகள் | |
எடை | 2.5 pounds (1.1 kg) |
நீளம் | 50 சென்டிமீட்டர்கள் (20 அங்) |
அகலம் | 9 சென்டிமீட்டர்கள் (3.5 அங்) |
வாள் வகை | ஒற்றை முனை |
கைப்பிடி வகை | மரம், கொம்பு |
வாளுறை/உறை | மரம், வெள்ளி |
தலை வகை | எஃகு |
தோற்றம்
தொகுஆயுத கத்தி கொடுவா மக்களின் பாரம்பரிய வாளாகும். கொடவா மக்கள் (கொடவா, கன்னடம்) இந்தியாவின் தென்மேற்கு பகுதியில், தற்போதைய கர்நாடகாவில் 2000 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தனர். ஆயுத கத்தி பெரும்பாலும் 17-ஆம் நூற்றாண்டு வாக்கில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம். அது முதலில் அடர்ந்த புதர்காடுகளை வெட்டும் கருவியாக கண்டுபிடிக்கப்பட்டது. இக்கத்தியின் வடிவமானது துருக்கியர்களின் யாடகன் மற்றும் வட இந்தியாவின் சொசுன் பட்டா கத்திகளை ஒத்திருப்பது பண்டைய கிரேக்கத்தின் கோபிசு கத்தியை குறிப்பதாக உள்ளது.[1]
காலனித்துவ காலத்தில், ஆங்கிலேயர் குடகினை ஆங்கிலேய வழக்கில் 'கூர்க்' என குறிப்பிட்டனர். 'குடகு' என்னும் சொல் இப்பகுதியின் புவியியல் நிலையை குறிப்பிடும் விதமாக கன்னடத்தில் 'மலைப்பாங்கான, செங்குத்தான' எனும் பொருளில் உருவாகி வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.[2]
கொடவாக்கள் மூர்க்கமான போர்வீரர்களாக அறியப்பட்டனர். அவர்கள் தங்கள் இறையாண்மையைக் காப்பாற்றுவதற்காக, தங்கள் அயலகத்தாருடன் போரிட்டனர். பின்னர் 1834 இல் பிரித்தானிய ஆளுகைக்கெதிரான போராட்டத்திலும் ஈடுபட்டனர். 1884 ஆம் ஆண்டில் மலப்புரம் அருகே நடந்த கலவரத்திற்கு பதிலடியாக அப்பகுதியினை தண்டிக்கும் விதமாக பிரித்தானிய அரசு அவர்களது ஆயுதங்களை மிகப்பெரிய அளவில் பறிமுதல் செய்தது. அதில் ஆயுத கத்தியும் அடக்கம். பதிவுகளின்படி அப்பகுதி பிரித்தானிய நிர்வாகத்தினரால் கைப்பற்றப்பட்ட 17,295 ஆயுதங்களில் 7,503 துப்பாக்கிகளாகும். இவற்றில் பெரும்பாலானவை கடலில் கொட்டப்பட்டன. அதே நேரத்தில் சென்னையிலுள்ள அருங்காட்சியகத்தில் இதன் உயர் தரமான மாதிரிகள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
வடிவ விவரிப்பு
தொகுஆயுத கத்தியின் மொத்த நீளம் சுமார் 50 சென்டிமீட்டராகும் (20 in). ஆனால் நீளம் வெகுவாக மாறுபடும். ஆயுத கத்தியில் இரண்டு அறியப்பட்ட வடிவங்கள் உள்ளன. 'போர்' வடிவம் பெரும்பாலும் அடிதடி சண்டைகளுக்காகவும், 'பீடுணர்வு' வடிவம் அன்றாட பயன்பாட்டிற்காகவும் பயன்படுத்தப்படுகின்றது.
உசாத்துணைகள்
தொகு- Atkinson, David J. (2016). "War Ayda Katti". Atkinson Swords. Atkinson Swords. Retrieved November 18, 2017.
- Gahir, Sunita; Spencer, Sharon, eds. (2006). Weapon - A Visual History of Arms and Armor. New York City: DK Publishing. {{ISBN|9780756622107}}.
- ↑ http://atkinson-swords.com/collection-by-region/indian-subcontinent/india/kodava-ayda-katti-india.html
- ↑ Gahir, Sunita; Spencer, Sharon, eds. (2006). Weapon - A Visual History of Arms and Armor. New York City: DK Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780756622107