ஆயுஷ்மான் (யோகம்)
இந்திய சோதிடத்தில் ஆயுஷ்மான் என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் மூன்றாவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 26° 40' தொடக்கம் 40° 00' "ஆயுஷ்மான்" யோகத்துக்கு உரியது. சூரியன், சந்திரன் ஆகிய கோள்களின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை இந்தக் கோணத்தினூடாக அதிகரிப்பதற்கு எடுக்கும் நேரத்துக்குரிய யோகம் "ஆயுஷ்மான்" ஆகும். இந்த நேரத்தில் பிறக்கும் ஒருவர் "ஆயுஷ்மான்" யோகத்தைத் தனது பிறந்த யோகமாகக் கொண்டிருப்பார்.
சமசுக்கிருத மொழியில் ஆயுஷ்மான் என்பது நீண்ட வாழ்நாள் கொண்டிருத்தல் என்னும் பொருள் கொண்டது. சோதிட நூல்கள் மங்கலமானவை எனக் குறிப்பிடும் யோகங்களுள் இதுவும் ஒன்று. இதன் ஆட்சிக் கோள் கேது. இதற்குரிய தேவதை சந்திரன்.[1]