யோகம் (பஞ்சாங்கம்)
யோகம் இந்துப் பஞ்சாங்கத்தின் ஐந்து கூறுகளுள் ஒன்று. ஏனைய நான்கும் வாரம், திதி, கரணம், நட்சத்திரம் என்பவை. யோகம் என்பது, சூரியன், சந்திரன் என்பவற்றின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை 13° 20' அளவால் அதிகரிப்பதற்கான காலப் பகுதியைக் குறிக்கும்.[1] எனவே ஒரு முழுச் சுற்றான 360° யில் 13° 20' அளவு கொண்ட 27 யோகங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்தனியான பெயர்களையும் பெற்றுள்ளன. இந்த யோகத்தைத் "தின யோகம்", "நித்திய யோகம்", "சூரிய சித்தாந்த யோகம்", போன்ற பெயர்களாலும் அழைப்பது உண்டு. ஒருவர் பிறக்கும் நேரத்தில் உள்ள யோகம் அவரது பிறந்த யோகம் ஆகும். ஒருவருடைய பிறந்த யோகம் அவருடைய உள்ளார்ந்த பண்புகளை அறிவதற்கு உதவும் என்கிறது இந்திய சோதிடம்.
இருபத்தேழு யோகங்கள்
தொகு1. விஷ்கம்பம் | 10. கண்டம் | 19. பரிகம் |
2. பிரீதி | 11. விருத்தி | 20. சிவம் |
3. ஆயுஷ்மான் | 12. துருவம் | 21. சித்தம் |
4. சௌபாக்கியம் | 13. வியாகதம் | 22. சாத்தியம் |
5. சோபனம் | 14. அரிசணம் | 23. சுபம் |
6. அதிகண்டம் | 15. வச்சிரம் | 24. சுப்பிரம் (சுக்கிலம்) |
7. சுகர்மம் | 16. சித்தி | 25. பிராமியம் |
8. திருதி | 17. வியாதிபாதம் | 26.ஐந்திரம் (மாஹேத்திரம்) |
9. சூலம் | 18. வரியான் | 27.வைதிருதி (வைத்திருதி) |
27 சோலி-சந்திர யோகங்களின் சிறந்த சாத்தியமான அர்த்தங்கள் மற்றும் விளக்கங்கள் பின்வருமாறு:
- விஷ்கம்பம் - மற்றவர்களை விட மேலோங்குகிறது, எதிரிகளை வென்றது, சொத்துக்களைப் பெறுகிறது, செல்வந்தர்
- பிரீதி - நன்கு விரும்பி, எதிர் பாலினத்திடம் ஈர்க்கப்பட்டு, மனநிறைவுடன் வாழ்க்கையை அனுபவிக்கிறார்
- ஆயுஷ்மான் - நல்ல ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுள், ஆற்றல்
- சௌபாக்கியம் - வாய்ப்புகள் நிறைந்த, மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிக்கிறார்
- சோபனம் - பளபளப்பான உடல் மற்றும் நடத்தை, சிற்றின்பம், செக்ஸ் மீது வெறி கொண்டவர்
- அதிகண்டம் - பல தடைகள் மற்றும் விபத்துகள் காரணமாக கடினமான வாழ்க்கை, பழிவாங்கும் மற்றும் கோபம்
- சுகர்மம் - உன்னதமான செயல்களைச் செய்கிறார், பெருந்தன்மை மற்றும் தொண்டு, செல்வந்தர்
- திருதி - மற்றவர்களின் செல்வம், பொருட்கள் மற்றும் வாழ்க்கைத் துணைகளை அனுபவிக்கிறது, மற்றவர்களின் விருந்தோம்பலில் ஈடுபடுகிறது
- சூலம் - மோதல் மற்றும் மாறாக, சண்டை, கோபம்
- கண்டம் - குறைபாடுள்ள ஒழுக்கங்கள் அல்லது நெறிமுறைகள், தொந்தரவான ஆளுமை
- விருத்தி - அறிவார்ந்த, சந்தர்ப்பவாத மற்றும் விவேகமான; வயதுக்கு ஏற்ப வாழ்க்கை தொடர்ந்து மேம்படும்
- துருவம் - நிலையான தன்மை, கவனம் செலுத்தி நிலைத்து நிற்கும் திறன், செல்வந்தர்
- வியாகதம் - கொடூரமான, மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கம்
- அரிசணம் (ஹர்ஷனா) - புத்திசாலி, மகிழ்ச்சி மற்றும் நகைச்சுவையில் மகிழ்ச்சி
- வச்சிரம்-வஜ்ரங்கள் - நல்வாழ்வு, கசிவு, கணிக்க முடியாத, வலிமையான
- சித்தி - திறமையான மற்றும் பல பகுதிகளில் சாதித்த; மற்றவர்களின் பாதுகாவலர் மற்றும் ஆதரவாளர்
- வியாதிபாதம் - திடீர் விபத்துக்கள் மற்றும் தலைகீழ் மாற்றங்கள், நிலையற்ற மற்றும் நம்பகத்தன்மையற்றவை
- வரியான் - எளிதாகவும் ஆடம்பரமாகவும், சோம்பேறியாகவும், காமமாகவும் நேசிக்கிறார்
- பரிகம் - வாழ்க்கையில் முன்னேற பல தடைகளை சந்திக்கிறது; எரிச்சல் மற்றும் தலையிடும் (குறுக்கீடு)
- சிவம் - உயர் அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்தால் கௌரவிக்கப்படுபவர், அமைதியான, கற்றறிந்த மற்றும் மதம், செல்வந்தர்
- சித்தம் - இடமளிக்கும் ஆளுமை, இனிமையான, இயல்பு, சடங்குகள் மற்றும் ஆன்மீகத்தில் ஆர்வம்
- சாத்தியம் - நல்ல நடத்தை, திறமையான நடத்தை மற்றும் ஆசாரம்
- சுபம் - பளபளப்பான உடல் மற்றும் ஆளுமை, ஆனால் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள்; செல்வம், எரிச்சல்
- சுக்கிலம் - கரடுமுரடான மற்றும் பறக்கும், பொறுமையற்ற மற்றும் மனக்கிளர்ச்சி; நிலையற்ற மற்றும் மாறக்கூடிய மனம்
- பிராமியம் - நம்பகமான மற்றும் இரகசியமான, லட்சியமான, நல்ல பகுத்தறிவு மற்றும் தீர்ப்பு
- ஐந்திரம் (மாஹேத்திரம்)-இந்திரன் - கல்வி மற்றும் அறிவில் ஆர்வம்; உதவிகரமான, வசதியுள்ள
- வைதிருதி (வைத்திருதி) - விமர்சன, சூழ்ச்சி இயல்பு; சக்திவாய்ந்த மற்றும் பெரும் (மன ரீதியாக அல்லது உடல் ரீதியாக)
கணிப்பு
தொகுயோகத்தின் வரைவிலக்கணத்துக்கு அமைய, ஒரு குறித்த நேரத்தில் என்ன யோகம் என்பதைக் கணிப்பதற்குப் பின்வரும் சூத்திரம் பயன்படுகிறது:
- (சூரியனின்_இருப்பிடம் + சந்திரனின்_இருப்பிடம்) / 13° 20'
இதில் கிடைக்கும் ஈவு, விஷ்கம்பத்தின் தொடக்கத்தில் இருந்து கடந்து போன யோகங்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். எனவே அடுத்த யோகமே குறித்த நேரத்தில் இருக்கும் யோகம் ஆகும். மீதம் அடுத்த யோகத்தில் கடந்த கோண அளவைக் குறிக்கும்.
நடைமுறையில், ஆண்டு தோறும் அச்சில் வெளிவருகின்ற பஞ்சாங்கங்கள் ஒவ்வொரு நாளும் எந்த நேரத்தில் ஒரு யோகம் தொடங்கி எந்த நேரத்தில் முடிவடையும் என்பது போன்ற தகவல்களைத் தருகின்றன. இதனால், கணிப்பு எதுவும் இல்லாமலே ஒருவர் குறித்த நேரத்தில் எந்த யோகம் உள்ளது என்பதை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். தற்காலத்தில் இணையத்திலும், சோதிடம் சார்ந்த பல தளங்களில் குறித்த ஒரு நேரத்தின் யோகத்தை அறிந்து கொள்வதற்கான வசதிகள் உள்ளன.
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Surya Siddhanta (Translation), 1861. பக். 25.