திருதி (யோகம்)

இந்திய சோதிடத்தில் திருதி என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் எட்டாவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 93° 20' தொடக்கம் 106° 40' வரை "திருதி" யோகத்துக்கு உரியது. சூரியன், சந்திரன் ஆகிய கோள்களின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை இந்தக் கோணத்தினூடாக அதிகரிப்பதற்கு எடுக்கும் நேரத்துக்குரிய யோகம் "திருதி" ஆகும். இந்த நேரத்தில் பிறக்கும் ஒருவர் "திருதி" யோகத்தைத் தனது பிறந்த யோகமாகக் கொண்டிருப்பார்.

சமசுக்கிருத மொழியில் திருதி என்பது சீரான தன்மை என்னும் பொருள் கொண்டது. மங்கலமானவை எனச் சோதிட நூல்கள் குறிப்பிடும் யோகங்களுள் இதுவும் ஒன்று. இதன் ஆட்சிக் கோள் இராகு. ஆட்சித் தேவதை அபசு.[1]

குறிப்புகள்

தொகு

உசாத்துணைகள்

தொகு

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருதி_(யோகம்)&oldid=3216379" இலிருந்து மீள்விக்கப்பட்டது