ஆய்வு மையம்

ஆய்வை நோக்கமாக கொண்டு உறுவாக்கபட்ட நிறுவனம்

ஆய்வு மையம் அல்லது ஆய்வுக் கழகம் (Research institute, research centre, research center or research organization) என்பது ஆய்வு நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட ஒரு கழகமாகும். பொதுவாக ஆய்வு நிறுவனங்கள் அடிப்படை ஆய்வில் நிபுணத்துவம் பெற்றிருக்கலாம் அல்லது பயன்பாட்டு ஆய்வை நோக்கியதாக இருக்கலாம். இந்த சொல் பெரும்பாலும் இயற்கை அறிவியல் ஆய்வைக் குறிக்கிறது என்றாலும், சமூக அறிவியலிலும், குறிப்பாக சமூகவியல் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி நோக்கங்களுக்காக பல ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளன.

அமெரிக்காவில் 14,000 க்கும் மேற்பட்ட ஆய்வு மையங்கள் உள்ளன. அடிப்படை தொழில்நுட்பம் மற்றும் கூடுதலான தொழில்நுட்ப நுட்பங்களைத் தவிர அடிப்படை ஆய்வு மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மையங்கள் பயன்படுத்துகின்றன. இன்று பல பல்கலைக்கழகங்கள் ஓர் குறிப்பிட்ட ஆராய்ச்சி அல்லது கல்வி ஆய்வு மேற்கொள்ள ஆராய்ச்சி மையங்களை நிறுவுகின்றன. நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி மையங்களை ஓர் பல்கலைக்கழகத்தில் நிறுவ முடியும். இந்த மையத்தின் செயல்பாடு ஓர் பல்கலைக்கழகத்திற்கும் மற்றோரு பல்கலைக்கழகத்திற்கும் இடையே வேறுபடுகிறது. ஆனால் ஆராய்ச்சி மையங்களில் பெரும்பாலானவை அறிவியல் அட்டவணையின் அடிப்படையில் அமைகின்றது.

புகழ்பெற்ற ஆய்வு மையங்கள்

தொகு

ஆரம்பகால இடைக்காலத்தில், இஸ்லாமிய உலகில் பல வானியல் ஆய்வுக்கூடங்கள் கட்டப்பட்டன. இவற்றில் முதன்மையானது அப்பாசியக் கலீபகத்தில் அல்-மாமுன் காலத்தில் கட்டப்பட்ட 9ஆம் நூற்றாண்டின் பகுதாதுபாக்தாத் கண்காணிப்பு நிலையம் ஆகும். இருப்பினும் மிகவும் பிரபலமானவை 13ஆம் நூற்றாண்டின் மராகே ஆய்வகம் மற்றும் 15ஆம் நூற்றாண்டின் உலுக் பெக் ஆய்வகம் ஆகியவை ஆகும்.[1]

கேரளா வானியல் மற்றும் கணிதப் பள்ளி என்பது தென்னிந்தியாவின் கேரளத்தில் உள்ள சங்கமகிராமத்தைச் சேர்ந்த மாதவனால் நிறுவப்பட்ட கணிதம் மற்றும் வானியல் பள்ளி ஆகும். அப்பள்ளி 14 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் செழித்தது. இப்பள்ளியின் கண்டுபிடிப்புகள் நாராயண பட்டத்திரி (1559-1632) உடன் முடிவடைந்ததாக தெரிகிறது. வானியல் சிக்கல்களைத் தீர்க்கும் முயற்சியில், கேரளப் பள்ளி சுயாதீனமாக பல முக்கியமான கணிதக் கருத்துகளைக் கண்டறிந்தது.

ஐரோப்பாவின் ஆரம்பகால ஆய்வு நிறுவனம் ஹ்வென் தீவில் உள்ள டைகோ ப்ராஹேவின் யுரேனிபோர்க் வளாகமாகும், இது 16 ஆம் நூற்றாண்டின் வானியல் ஆய்வகமாகும். இது நட்சத்திரங்களை மிகவும் துல்லியமான அளவீடுகள் செய்ய அமைக்கப்பட்டது. அமெரிக்காவில் பெல் ஆய்வுக்கூடங்கள், ஜெராக்ஸ் பார்க், தி ஸ்கிரிப்ஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்,[2] பெக்மேன் இன்ஸ்டிடியூட் மற்றும் எஸ்ஆர்ஐ இன்டர்நேஷனல் உட்பட பல குறிப்பிடத்தக்க ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளன.

குறிப்பிடத்தக்க ஆராய்ச்சி மையங்கள்

தொகு
  1. அமேஸ் ஆராய்ச்சி மையம்
  2. பெல் லேப்ஸ்
  3. மேம்பட்ட வாழ்க்கை சுழற்சி பொறியியல் மையம்
  4. கடல் அறிவியல் ஆராய்ச்சி மையம்
  5. பாலோ ஆல்டோ ஆராய்ச்சி மையம்
  6. தாமஸ் ஜே. வாட்சன் ஆராய்ச்சி மையம்
  7. உயிரியல் ஆராய்ச்சி மையம்
  8. பென்னிங்டன் பயோமெடிகா
  9. எல் ஆராய்ச்சி மையம்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆய்வு_மையம்&oldid=3721873" இலிருந்து மீள்விக்கப்பட்டது