ஆரண்யனி
ஆரண்யனியைக் குறிப்பிடும் ஒரு கலை வேலைப்பாடு
அதிபதிவனக்கடவுள்[1]
வகைதேவி
நூல்கள்இருக்கு வேதம்

ஆரண்யனி (Aranyani) (சமக்கிருதம்: अरण्यानि)[2] இந்து மதத்தில் காடுகள் மற்றும் காடுகளில் வாழும் காட்டு விலங்குகளின் இயற்கைத் தெய்வங்களுள் ஒன்றாகும். சமசுகிருத மொழியில் ஆரண்யம் என்றால் காடு என்பது பொருளாகும்.

இலக்கியம் தொகு

ஆரண்யனி குறித்து அர்ப்பணிக்கப்பட்ட ரிக்வேதத்தின் மிகவும் விளக்கமான பாடல் ஒன்று உள்ளது. ஆரண்யனி சூக்தம் (ரிக்வேதத்தின் 10வது மண்டலத்தில் உள்ள பாடல் 146) இந்தப் பாடல் ஆகும்.[3] ஆரண்யனி மழுப்பலானவர், காட்டில் அமைதியான சூழலை விரும்புகிறார். தொலைதூர இடங்கள் குறித்து பயப்படாமல் இருப்பார் என்று விவரிக்கிறது இந்தப் பாடல். நாகரிகத்தின் விளிம்பிலிருந்து பயப்படாமல் அல்லது தனிமையாக எப்படி அலைந்து திரிகிறார் என்பதை இப்பாடல் விளக்குகிறது. இவர் மணியுடன் கூடிய தண்டையினை அணிந்திருப்பார். எப்போதாவது இவரை இச்சத்தத்தின் மூலம் கேட்க முடியும்.[4] இவர் ஒரு நடனக் கலைஞர் என்று வர்ணிக்கப்படுகிறார். மனிதன் மற்றும் விலங்குகள் இரண்டிற்கும் உணவளிக்கும் இவரது திறன், 'நிலம் இல்லாதவளாக' இருந்தபோதிலும், ஒருவர் காணக்கூடிய அற்புதமான காட்சியாக உள்ளது. தைத்திரீயப் பிராமணத்தில் பாடல் திரும்பத் திரும்பக் கூறப்பட்டு, இந்தப் படைப்பின் வர்ணனையாளரால் விளக்கப்படுகிறது.

ஆரண்யனி மேற்கு வங்காளத்தில் உள்ள பன்பினி, கோவாவில் உள்ள வனதேவதா மற்றும் கொங்கன் பகுதியில் உள்ள வனதுர்கா போன்ற பிற்கால வனத் தெய்வங்களுடன் ஒப்பிடப்படுகிறது. நவீன இந்து மதத்தில் இவரது வழிபாடு குறைந்துவிட்டது, மேலும் ஆரண்யனிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலைக் காண்பது அரிதாக உள்ளது. இருப்பினும், பீகாரில் உள்ள அர்ராவில் ஆரண்யா தேவி கோயில் என்று ஒன்று உள்ளது.

இவர் சில சமயங்களில் தெய்வீக மரமான கற்பக மரத்தின் உரிமையாளராகக் கருதப்படுகிறார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Aranyani, Araṇyāni, Araṇyānī: 9 definitions". 28 December 2018.
  2. www.wisdomlib.org (2021-08-27). "Rig Veda 10.146.1 [English translation]". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-10.
  3. "Hymn to a Forest Nymph in the Rig Veda". Archived from the original on 30 January 2020.
  4. The Hymns of the Rigveda, Ralph T. H. Griffith, 1973.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரண்யனி&oldid=3892424" இலிருந்து மீள்விக்கப்பட்டது