ஆரத்தி பட்டாச்சார்யா
ஆரத்தி பட்டாச்சார்யா(Arati Bhattacharya) [4] ஓர் இந்திய பெங்காலி நடிகை, எழுத்தாளர் மற்றும் இயக்குநர் ஆவார்.[5] பெங்காலி சினிமாவில் இவர் செய்த பணிக்காக அங்கீகரிக்கப்பட்டவர். உத்தம் குமார், சௌமித்ரா சாட்டர்ஜி மற்றும் அனில் சாட்டர்ஜி போன்ற நடிகர்களுடன் இவரது திரை ஜோடி பிரபலமானது. பின்னர் இவர், ஹிந்தி மற்றும் போஜ்புரி திரைப்படத் துறையில் வெற்றிகரமான திரைக்கதை எழுத்தாளராக இடம்பெயர்ந்தார்.
ஆரத்தி பட்டாச்சார்யா | |
---|---|
ஆரத்தி, குணால் சிங் திருமண விழாவில் கலந்துகொண்ட சத்யஜித் ராய். | |
பிறப்பு | ஹீக்ளி (சுன்சுரா) |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகை |
வாழ்க்கைத் துணை | குணால் சிங் (நடிகர், பிறப்பு 1955)[1][2] |
பிள்ளைகள் | ஆகாஷ் சிங் (நடிகர், பிறப்பு 1987) (மகன்) [3] |
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுஆரத்தி பட்டாச்சார்யா இந்தியாவின் ஜாம்ஷெட்பூரில் பிறந்தார். டி.எம். மதன் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்ற பிறகு, ஜாம்செட்பூர் மகளிர் கல்லூரியில் சேர்ந்தார், ஆனால் படிப்பை முடிக்க முடியவில்லை.
நாடக கலைஞராக
தொகுஜாம்செட்பூரில் நடந்த கல்லூரி நாடகத்தில் சத்யா பந்தோபாத்யாயுடனான முதல் தற்செயலான சந்திப்பிற்குப் பிறகு, சத்யா பந்தோபாத்யாய் கொல்கத்தாவில் ஒரு நாடக கலைஞராக வந்து பணியாற்ற அழைத்தார். பின்னர் இவர் தனது தாயுடன் கொல்கத்தாவுக்குச் சென்று, சத்யா பந்தோபாத்யாய் எழுதி இயக்கிய 'கேயா' என்ற முக்கிய கதாபாத்திரத்தில் ரங்மஹால் தியேட்டரில் "நஹாபத்" நாடகத்தில் நாடகக் கலைஞராக தனது நடிப்பைத் தொடங்கினார்.[6] 1972 ஆம் ஆண்டு மிருணாள் சென் இயக்கிய "ஏக் அதுரி கஹானி" திரைப்படத்தில் முன்னணி நடிகையாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்த பிறகு 1970 களில் மறக்கமுடியாத பல பாத்திரங்களில் நடித்தார்.
தொழில்
தொகுஆரத்தி பட்டாச்சார்யா, பிரேயசி, ஸ்திரீ, சூர்யத்ரிஷ்னா போன்ற படங்களுக்காக பிரபலமாக அறியப்பட்டவர். 1976இல், ஆனந்தமேளா திரைப்படத்தில் பாடகியாகவும் குரல் கொடுத்தார். இவர் சத்யஜித் ராயுடன் ஜன ஆரண்யாவில் [7] மேலும் மிருணாள் சென்னுடன் ஏக் அதுரி கஹானியில் பணியாற்றினார். 50க்கும் மேற்பட்ட பெங்காலி படங்களில் நடித்துள்ளார். இவரும் ஒரு கதக் நடனக் கலைஞராவார்.[8] இவர் சில இந்தி மற்றும் போஜ்புரி படங்களையும் இயக்கியுள்ளார். இப்போது போஜ்புரி திரையுலகில் ஒரு வெற்றிகரமான திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றி வருகிறார்.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுபோஜ்புரி நடிகரும் அரசியல்வாதியுமான குணால் சிங்கை மணந்தார். இவர்களது மகன் நடிகர் ஆகாஷ் சிங் .
விருதுகள்
தொகுபெங்கால் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் – அமி சே ஓ சகா (1976) [9] திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.
திரைப்படவியல்
தொகுஒரு நடிகராக
தொகு- ரேவாஸ் (வெளியிடப்படவில்லை)
- ஏக் அதுரி கஹானி (முடிவடையாத கதை) (1972)
- பிக்னிக் (1972)
- ஸ்த்ரீ (1972 திரைப்படம்)
- ஜீவந்தை நாடகம்
- அலோ அந்தரே (1973)
- பிரேமர் பாண்டே (1974)
- ராஜா (1974)
- ஹார்மோனியம் (1975)
- அமி-சே-ஓ-சகா (1975)
- ஹரனோ-ப்ராப்தி-நிருத்தேஷ் (1975)
- ஆனந்தமேளா
- ஜல் சன்யாசி
- ராஜ்பன்ஷா (1976)
- ஜன ஆரண்யா (நடுத்தர மனிதன்) (1976) திருமதி கங்குலி
- நந்திதா (1976)
- அசாதரன் (1977)
- கோலப் பௌ (1977)
- ஜல் சன்யாசி (1977)
- பிரதிஷ்ருதி (1977)
- ராஜ்பன்ஷா (1977)
- நிஷான் (1978)
- மொய்னா (1978)
- பரிச்சாய் (1978)
- ஸ்ட்ரைக்கர் (1978)
- ஜாப் சார்னோக்கர் பீபி (1978)
- ஜிபன் ஜெ ரகம் (1979)
- பம்பா (1979)
- நியாய் அன்யாய் (1981)
- சூர்யா திரிஷ்னா (1984)
- அமர் பிரிதிபி (1985)
- பிரேயாசி (1986)
- கல் ஹமாரா ஹைன் (1980) (ஹிந்தி)
ஒரு இயக்குனராக
தொகு- மாஷுகா (1987)(இந்தி)
- டகாபால் பல்மா (1988) (போஜ்பூரி)
சான்றுகள்
தொகு- ↑ "Kunal Singh's son to make debut in Bollywood - Times of India". The Times of India.
- ↑ "What wives of politicians do during poll season". 30 March 2014.
- ↑ "Biography of Akash Singh: son of Bhojpuri actor Kunal singh, hero of Bloody Isshq film". socialvillage.in. 17 February 2013. Archived from the original on 2 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 13 பிப்ரவரி 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "Arati Bhattacharya missed the chance to work in Satyajit Ray's 'Ghawre Bairey' - Times of India". The Times of India.
- ↑ BollySwar: 1981 - 1990.
- ↑ "ঘুটঘুটানন্দ ধরলেন নহবতের পোঁ" (in Bengali).
- ↑ "Boy nextdoor awaits big Bollywood break - Son of Bhojpuri matinee idol to be seen in exotic Thailand locales on silver screen". www.telegraphindia.com.
- ↑ "waiting-for-a-doyen-s-glance-arati-bhattacharya". cinemaazi.com.
- ↑ "arati-bhattacharya-interview-5286". aajkaal.in.[தொடர்பிழந்த இணைப்பு]