சௌமித்திர சாட்டர்ஜி

சௌமித்திர சாட்டர்ஜி (Soumitra Chatterjee) அல்லது சௌமித்திர சட்டோபாத்யாய் (வங்காள மொழி: সৌমিত্র চট্টোপাধ্যায়, சனவரி 19, 1935 — நவம்பர் 15, 2020) இந்தியாவின் புகழ்பெற்ற வங்காள நடிகர் ஆவார். வங்காளத் திரைப்படத்துறையின் மிகப்பெரும் இயக்குனராக விளங்கிய சத்தியஜித் ரேயின் திரைப்படங்களில் சிறப்பான வேடங்களில் நடித்துள்ளார். வங்காளத் திரைப்படத்துறையின் மக்கள் கலைஞராக விளங்கிய உத்தம் குமாருடன் அடிக்கடி ஒப்பிடப்படுவதாலும் நன்கு அறிமுகமானவர். இந்தியத் திரைப்படத்துறையில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் தாதாசாகெப் பால்கே விருதுக்கு 2012ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டவர்.[2]

சௌமித்திர சாட்டர்ஜி
সৌমিত্র চট্টোপাধ্যায়
சௌமித்திர சாட்டர்ஜி
பிறப்பு(1935-01-19)சனவரி 19, 1935
கிருஷ்ணநகர், மேற்கு வங்காளம், இந்தியா
இறப்புகொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா[1]
பணிநடிகர், கவிஞர்

பின்னணி தொகு

சௌமித்திர சாட்டர்ஜி மேற்கு வங்காளத்தின் தலைநகர் கொல்கத்தாவிலிருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள கிருஷ்ணாநகரில் 1935ஆம் ஆண்டு பிறந்தார். அவரது இளமைக் காலத்திலேயே சௌமித்திர சாட்டர்ஜியின் குடும்பம் கொல்கத்தா மற்றும் ஹவுராவிற்கு குடிபெயர்ந்தது. வங்காள இலக்கியத்தில் சௌமித்திர சாட்டர்ஜி, கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் சிறப்புகளுடன் இளங்கலைப் பட்டம் பெற்றார். அதே பல்கலைக்கழக்கத்தில் வங்காள இலக்கியத்தில் முதுகலைப் பட்டப் படிப்பும் மேற்கொண்டார். கொல்கத்தாவில் சத்தியஜித் ரேயின் பழைய அடுக்ககம் ஒன்றில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். திரைப்படங்களில் நடிக்க தொடங்குவதற்கு முன்னால் இவர் அனைத்திந்திய வானொலியில் பணியாற்றி உள்ளார்.

சத்தியஜித் ரேயுடன் தொகு

சௌமித்திர சாட்டர்ஜி சத்தியஜித் ரேயின் அப்பூர் சன்சார் (அப்புவின் உலகம்) என்றத் திரைப்படத்தில் 1959ஆம் ஆண்டில் அறிமுகமானார். இதன்பிறகு ரேயுடன் பதினான்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருடன் சர்மிளா தாகூரும் பல ரே திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவரைப் பல வேடங்களில் நடிக்க வைத்துள்ள ரே சில வேடங்களும் திரைக்கதையும் இவரை மனதில் இருத்தியே உருவாக்கப்பட்டதாகவும் கருதப்படுகிறது. சத்தியஜித் ரேயின் ஃபெலுடா தொடர் நூல்களிலும் 1970களின் சோனார் கெல்லா, ஜோய் பாபா ஃபெலுநாத் என்ற இருத் திரைப்படங்களிலும் தனிநபர் துப்பறிவாளராக வரும் ஃபெலுடா என்ற பிரதோஷ் சந்திர மிடர் வேடத்தில் நடித்துள்ளார். கரே பாய்ரே என்ற ரவீந்திர நாத் தாகூரின் புதினத்தை திரைப்படவடிவில் எடுத்தபோது அதில் முதன்மை வேடத்தில் நடித்தார். சாக்கா பிரசாக்கா என்றத் திரைப்படத்தில் மனதை உருக்கும் விதத்தில் நடித்துள்ளார்.

சத்தியஜித் ரே தவிர மிருணாள் சென் ,தபன் சின்கா ஆகிய முன்னணி வங்காளத் திரைப்பட இயக்குனர்களின் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

விருதுகள் தொகு

சௌமித்திர சாட்டர்ஜி பெற்ற சில முதன்மையான விருதுகள்:

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌமித்திர_சாட்டர்ஜி&oldid=3584664" இருந்து மீள்விக்கப்பட்டது