ஆராரோ ஆரிரரோ

பாக்யராஜ் இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஆராரோ ஆரிரரோ (Aararo Aaariraro) 1989 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.கே. பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. பாக்யராஜ்,பானுப்பிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இது "தூகுவே கிருஷ்ணானா" என்கிற பெயரில் கன்னட மொழியில் 1994இல் மறுஆக்கம் செய்யப்பட்டது. கன்னட மொழி படத்தில் அனந்த் நாக் நடித்துள்ளார்.

ஆராரோ ஆரிரரோ
இயக்கம்பாக்யராஜ்
தயாரிப்புபூர்ணிமா பாக்கியராஜ்
கதைபாக்யராஜ்
இசைபாக்யராஜ்[1]
நடிப்பு
ஒளிப்பதிவுகே. ராஜ்பிரீத்
படத்தொகுப்புஏ. பி. மணிவண்ணன்
கலையகம்சாந்தனு சினி கம்பைன்ஸ்
விநியோகம்சாந்தனு சினி கம்பைன்ஸ்
வெளியீடுநவம்பர் 24, 1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை தொகு

பாபு ஒரு மனநல மருத்துவமனையில் நோயாளிகளைப் பாதுகாக்கும் பணியில் இருக்கிறான். பாபு நோயாளிகளிடம் மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டு அவர்களைப் போலவே உடைகளை அணிந்து கொள்பவன். அதனால் பாபுவை தலைமை மருத்துவருக்கு மிகவும் பிடிக்கும். அங்கு வேலை செய்யும் இரு ஊழியர்களுக்கு பாபுவை பிடிப்பதில்லை.

அந்த மருத்துவமனையின் நன்கொடையாளர்களில் ஒருவர் ஒரு பெண்ணை அழைத்துவந்து, மனநிலை சரியில்லாதவள் என்று தான் சந்தேகப்படுவதாகக் கூறினார். மேலும் அப் பெண்ணைக் கவனித்துக்கொள்ள ஒருவரும் இல்லை எனவும் அவளைப் பற்றின தகவல் எதுவும் தெரியாது எனத் தெரிவித்தார். அதனால் போதகரான, தலைமை மருத்துவர் அவளை மருத்துவமனையில் அனுமதித்தார். பாபு அனைவரிடமும் பழகுவது போலவே அந்தப் பெண்ணிடம் பழகுகிறான். இதைக் கண்ட ஊழியர்கள் பாபுவைப் பற்றி அவதூறாகப் பேசுகின்றனர். பாபு அப்பெண்ணிற்கு மீனாட்சி எனப் பெயரிட்டு, மீனா என்று அழைக்கலானான்.

இரண்டு ஊழியர்களில் ஒருவன், மனநிலை சரியில்லாத ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்தான். இதை பார்த்த மீனாட்சி பலமாக சத்தம் செய்து அவளை காப்பாற்றினாள். இதனால் அவர்கள் மேலும் மீனாட்சிக்கு தொல்லை கொடுத்தனர். பாபு அவர்களிடமிருந்து மீனாவைக் காப்பாற்றுகிறான். முன்பை விட அவள் மேல் கூடுதல் கவனம் செலுத்துகிறான். மீனா யார் என்கிற கேள்விக்கு விடையாக இந்தக் கதை முடிவிற்கு வருகிறது.[2][3]

நடிப்பு தொகு

பாடல்கள் தொகு

இப் படத்திற்கு இசை அமைத்தவர் பாக்யராஜ்.[1] பாடல்களை வாலி மற்றும் வைரமுத்து எழுதியுள்ளனர்.[4]

எண். பாடல் பாடியவர்கள் எழுதியவர் நீளம் (m:ss)
1 "எல்லோருமே லூசுங்கதான்" பாக்யராஜ் மற்றும் குழுவினர் வைரமுத்து 03:43
2 "என் கண்ணுக்கொரு நிலவா" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி மற்றும் குழுவினர் வாலி 04:29
3 "என்ன ஃபிகர்" எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் குழுவினர் 04:16
4 "ஓடப்பக்கம் ஒரு குருவி" எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் சித்ரா 04:18
5 "ஒரு மூனாம் பிறை" எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் வாணி ஜெயராம் 04:24
6 "தானா தலையாடுதுன்டா" எஸ். ஜானகி மற்றும் குழுவினர் 05:16

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Aararo Aariraro Songs". http://www.no1tamilsongs.com/A-Z%20Movie%20Songs/Aararo%20Aariraro. பார்த்த நாள்: 2014-02-11. 
  2. "Film List Of Director Barathiraja". Lakshman Shruthi இம் மூலத்தில் இருந்து 30 மே 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120530003918/http://www.lakshmansruthi.com/cineprofiles/bhakyaraj04.asp. பார்த்த நாள்: 22 December 2011. 
  3. "Bhagyaraj Profile". Jointscene இம் மூலத்தில் இருந்து 24 December 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111224164354/http://www.jointscene.com/artists/Kollywood/Bhagyaraj/138. பார்த்த நாள்: 22 December 2011. 
  4. http://bollywoodvinyl.in/products/araro-ariraro-1989-tamil-vinyl-l-p
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆராரோ_ஆரிரரோ&oldid=3712024" இருந்து மீள்விக்கப்பட்டது