ஆரிகுப்ரைடு

தாமிரம் மற்றும் தங்கம் ஆகிய உலோகங்கள் சேர்ந்து உருவாகும் கலப்புலோகம்

ஆரிகுப்ரைடு (Auricupride) என்பது Cu3Au என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிமமாகும். தாமிரம் மற்றும் தங்கம் ஆகிய உலோகங்கள் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் ஓர் இயற்கையாகத் தோன்றும் கலப்புலோகமாக கருதப்படுகிறது. தேவைக்கேற்ப வளைத்துக் கொள்ளும் வகையில் மணிகளாக அல்லது தட்டுகளாக கனசதுரப் படிக அமைப்பில் இது படிகமாகிறது. சிவப்புச் சாயல் கொண்ட மஞ்சள் நிறத்தில் ஒளிபுகாத் தன்மையை ஆரிகுப்ரைடு வெளிப்படுத்துகிறது. 3.5 என்ற கடினத்தன்மை மதிப்பும் 11.5 என்ற ஒப்படர்த்தி மதிப்பையும் இது பெற்றுள்ளது[2]

ஆரிகுப்ரைடு
Auricupride
ஆரிகுப்ரைடு
பொதுவானாவை
வகைதாயகத் தனிமங்கள்
வேதி வாய்பாடுCu3Au
இனங்காணல்
மோலார் நிறை387.60 கி/மோல்
நிறம்சிவப்புச் சாயலில் மஞ்சள் நிறம்
படிக அமைப்புகனசதுரப் படிகங்கள்
முறிவுவளைந்து கொடுக்கும்
மோவின் அளவுகோல் வலிமை3 12
மிளிர்வுஉலோகத்தன்மை
கீற்றுவண்ணம்மஞ்சள்
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
புறவூதா ஒளிர்தல்ஒளிராது
மேற்கோள்கள்[1][2][3][4]

மற்றொரு மாறுபட்ட வடிவமான டெட்ரா- ஆரிகுப்ரைடு என்ற கனிமமும் அறியப்படுகிறது. வெள்ளி உலோகம் இடம்பெற நேர்ந்தால் (Cu3(Au,Ag)) அர்கென்டோகுப்ரோ ஆரைடு என்ற கனிமமாக இது காணப்படுகிறது[1]

உருசியாவின் யூரல் மலைத்தொடரில் 1950 ஆம் ஆண்டில் ஆரிகுப்ரைடு கண்டுபிடிக்கப்பட்டதாக விவரிக்கப்படுகிறது. தாழ்வெப்பநிலையில் கலப்படமில்லாத செர்பென்டைனைட்டுகளாகவும், கிட்டத்தட்ட ஒடுக்க ஏற்ற சிவப்பு நிற படிவுகளாகவும் ஆரிகுப்ரைடு காணப்படுகிறது. சிலி, அர்கெந்தீனா, தாசுமேனியா, உருசியா, சைப்பிரசு, சுவிட்சர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா. போன்ற நாடுகளில் ஆரிகுப்ரைடு காணப்படுகிறது.[2][1]

பன்னாட்டு கனிமவியலாளர் சங்கம் ஆரிகுப்ரைடு கனிமத்தை Auc[5] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Auricupride: Auricupride mineral information and data". Mindat.org.
  2. 2.0 2.1 2.2 http://www.handbookofmineralogy.org/pdfs/auricupride.pdf Handbook of Mineralogy
  3. Mineralienatlas
  4. Webmineral
  5. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரிகுப்ரைடு&oldid=4128452" இலிருந்து மீள்விக்கப்பட்டது