ஆரியன்மாலா நாடகம்

பாலக்காடு மாவட்டத்தில் நிகழ்த்தப்படும் ஒரு நாடோடி நாடகக் கலைரூபமே ஆர்யன்மாலா நாடகம். இதை ஆர்யமாலையாட்டம், ஆர்யமாலைக்களி, ஆர்யமாலக்கூத்து என்னும் பெயர்களிலும் அழைப்பர். இது தமிழ்நாட்டில் உள்ள சிற்றூர்களான தத்தமங்கலம், எலவஞ்சேரி, பெருமாட்டி, புதுச்சேரி பகுதிகளில் பாரம்பரியமான நடனமாகவுள்ளது.[1]. கொல்லம் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இது காணப்படும். தமிழ் சங்கீத நாடக பாரம்பரியத்தில் நிகழ்த்தப்படும்.

பாண சமுதாயத்தைச் சேர்ந்தவர் இந்த நாடகக் கலையை இரவு நேரங்களில் நிகழ்த்துவர். நாலு மூலையிலும் கால் நட்டு, அதன் மீது அலகு குத்தி, ஓலையோ பரம்போ கொண்ட பந்தல் அமைத்து, பந்தலினுள் உரல் கவிழ்த்திவைத்து அதன் மீது நிலவிளக்கை வைப்பர். நிலவிளக்கின் ஒளியிலே நடிப்பும், வசனமும், பாட்டும் நாடகம் நிகழ்த்தப்படும். பாடல்களில் தமிழ் கலந்ந மலையாள சொற்கள் இருக்கும். செண்டை, இலத்தாளம் ஆகிய கருவிகளைக் கொண்டு வாசிப்பர். [2]

சான்றுகள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304204506/http://lsgkerala.in/nenmarablock/history/. 
  2. டோ. சசிதரன் க்லாரி (2012). கேரளீய கலாநிகண்டு. ஒலிவ். பக். 32 -33. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789381788523. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரியன்மாலா_நாடகம்&oldid=3542952" இருந்து மீள்விக்கப்பட்டது