ஆரியபட்டா (செயற்கைக்கோள்)

(ஆரியபட்டா (செய்மதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இக்கட்டுரை இந்தியாவின் முதலாவது செயற்கைக்கோ பற்றியது. இதே பெயருடைய வானியலாளர் பற்றி அறிய ஆரியபட்டா கட்டுரையைப் பார்க்க.

ஆரியபட்டா (Aryabhata) என்பது இந்தியாவின் முதலாவது செயற்கைக்கோள் ஆகும். இப்பெயர் புகழ்பெற்ற இந்திய வானியலாளரான ஆரியபட்டா என்பவரின் நினைவாக இச்செய்மதிக்கு சூட்டப்பட்டது. இச்செயற்கைக்கோள் சோவியத் ஒன்றியத்தால் 1975, ஏப்ரல் 19 இல் கப்புஸ்டீன் யார் என்ற இடத்தில் இருந்து கொஸ்மொஸ்-3எம் என்ற ஏவுகலன் மூலம் செலுத்தப்பட்டது. ஆரியபட்டா இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தினால் வானியல் ஆய்வுகளை மேற்கொள்ளுவதற்காக அமைக்கப்பட்டது. பூமியின் காற்று மண்டலத்தில் இது பெப்ரவரி 11, 1992 இல் மீளவும் வந்தது.

ஆரியபட்டா
Aryabhata
Aryabhata Satellite.jpg
இயக்குபவர்இஸ்ரோ
திட்ட வகைவானியற்பியல்
செயற்கைக்கோள்பூமி
ஏவப்பட்ட நாள்ஏப்ரல் 19, 1975
ஏவிய விறிசுகொஸ்மொஸ்-3எம்
தே.வி.அ.த.மை எண்1975-033A
நிறை360.0 கிகி
திறன்46 W
சுற்றுப்பாதை உறுப்புகள்
வான்வெளி கோளப்பாதைLow Earth orbit
சாய்வு50.7º
சேய்மைநிலை619 கிலோமீட்டர் (385 மை)
அண்மைநிலை563 கிலோமீட்டர் (350 மை)
சுற்றுக்காலம்96 நிமிடங்கள்
செயற்கைக்கோள்கள் பாஸ்கரா I, பாஸ்கரா II, ஆர்யபட்டா கொண்ட 1984 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் வெளியிட்ட முத்திரை.


இவற்றையும் பார்க்கதொகு

வெளி இணைப்புகள்தொகு