முதன்மை பட்டியைத் திறக்கவும்

தேசிய விண்வெளி அறிவியல் தரவு மையம்

தேசிய விண்வெளி அறிவியல் தரவு மையம் என்பது, நாசாவின் சூரிய மண்டல ஆய்வுப்பயணப் பிரிவின் ஒரு பகுதியாகும். நாசாவின் விண்வெளி அறிவியல் திட்டத் தரவுகளைப் பாதுகாத்து வைப்பதற்காக இது உருவாக்கப்பட்டது. இது மேரிலாந்தின், கிறீன்பெல்ட்டில் உள்ள நாசாவின் கொட்டார்ட் விண்வெளிப் பறப்பு மையத்தில் அமைந்துள்ளது. இத் தரவு மையம் நாசாவின் தரவுகளைப் பொது மக்களும், ஆய்வாளர்களும் கட்டற்றமுறையில் அணுகுவதற்கு ஏற்பாடு செய்துள்ளது. இத் தரவுகளுள் ஆய்வு செய்யப்படாத தரவுகளும், படிமங்களும் அடங்கும்.


தேசிய விண்வெளி அறிவியல் தரவு மையம், உலகம் முழுவதிலுமிருந்து ஏவப்பட்ட விண்கலங்கள், செய்மதிகள் எல்லாவற்றுக்கும் அனைத்துலக அடையாளக் குறியீடுகளை வழங்கி வருகிறது. இத் தகவலும், செய்மதிகள் குறித்த பின்னணித் தகவல்களும், தேடக்கூடிய பொது முதன்மைப் பட்டியலில் கிடைக்கின்றன.