ஆரி பாட்டர் அண்டு த காப் பிளட்டு பிரின்சு (நூல்)
ஆரி பாட்டர் அண்டு த காப் பிளட்டு பிரின்சு (Harry Potter and the Half-Blood Prince) என்பது ஜே. கே. ரௌலிங்கின் ஆரி பாட்டர் தொடரில் வரும் ஆறாவது புதினமாகும்.[1] இப்புதினம் 16 சூலை 2005 அன்று புலூம்சுபெரியால் ஐக்கிய இராச்சியத்திலும், இசுகொலாசுடிக்கால் ஐக்கிய அமெரிக்க நாடுகளிலும், ரெயின்கோசுட்டால் கனடாவிலும் வெளியிடப்பட்டது. இது கதையின் கதாநாயகனாகிய ஆரி பாட்டர், ஆக்வாட்சில் தனது ஆறாவது வருடம் பயின்று கொண்டு வோல்டெமோர்டிற்கு எதிராக ஆக்வாட்சின் தலைமையாசிரியரும், ஆரியின் வளவாளருமான அல்பசு டம்பிள்டோருடன் சேர்ந்து இறுதிப் போருக்காக முன்னாயுத்தங்களை செய்வது பற்றி இக்கதை தொடர்கின்றது.
நூலாசிரியர் | ஜே. கே. ரௌலிங் |
---|---|
பட வரைஞர் | ஜேசன் கொக்ரொப்டு (ஐ. இ) மேரி கிரான்ட்பிரி (ஐ. அ. நா.) |
தொடர் | ஆரி பாட்டர் |
வெளியீட்டு எண் | தொடரில்6-ஆம் |
வகை | கற்பனை |
வெளியீட்டாளர் |
|
வெளியிடப்பட்ட நாள் | 16 சூலை 2005 |
பக்கங்கள் | 607 (மூல ஐ. இ. பதிப்பு) 542 (2014 ஐ. இ. பதிப்பு) 652 (ஐ. அ. நா. பதிப்பு) |
ISBN | 0-7475-8108-8 |
823.914 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Book 6 – The Half-Blood Prince". CBBC Newsround. 10 July 2007. http://news.bbc.co.uk/cbbcnews/hi/newsid_6280000/newsid_6282500/6282542.stm. பார்த்த நாள்: 23 March 2011.