ஆர்கேனைட்டு

சல்பேட்டுக் கனிமம்

ஆர்கேனைட்டு (Arcanite) என்பது K2SO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும்.

ஆர்கேனைட்டு
Arcanite
ஆர்கேனைட்டு
பொதுவானாவை
வகைசல்பேட்டு கனிமம்
வேதி வாய்பாடுK2SO4
இனங்காணல்
நிறம்வெண்மையாகவும் நிறமற்றும், மஞ்சள்
படிக இயல்புபடிகங்கள், குறிப்பாக மேல்ப்ப்டுகலள் மற்றும் பூச்சுகள்
படிக அமைப்புநேர்சாய்சதுரம்
இரட்டைப் படிகமுறல்{110} இல் வளைவு
பிளப்பு{010} மற்றும் {001} இல் தெளிவு
மோவின் அளவுகோல் வலிமை2
மிளிர்வுகண்ணாடி பளபளப்பு
கீற்றுவண்ணம்White
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும் மற்றும் கசியும்
ஒப்படர்த்தி2.66
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (+)
ஒளிவிலகல் எண்nα = 1.494 nβ = 1.495 nγ = 1.497
இரட்டை ஒளிவிலகல்δ = 0.004
2V கோணம்அளக்கப்பட்டது: 67°
மேற்கோள்கள்[1][2][3]

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள ஆரஞ்சு மாகாணத்தின் சாண்டா அனா மலைத் தொடரில் இக்கனிமம் முதன் முதலாக 1845 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இம்மலையின் அடிவாரத்தில் இருக்கும் டிராபூகோ கேனியன் பகுதியில் அமைந்துள்ள சாண்டா அனா வெள்ளீய சுரங்கத்தில் ஆர்கேனைட்டு காணப்பட்டது. இத்தாலி நாட்டின் லாட்டியம் மண்டலத்திலுள்ள செசானோ புவிவெப்ப புலத்தில் உள்ள நீர் வெப்ப வைப்புகளிலிருந்தும் இது கண்டறியப்பட்டுள்ளது. பெரு நாட்டின் சிஞ்சா தீவுகளில் கடற்பறவைகள் மற்றும் வௌவால்களின் எச்சத் திரள்களிலும் மேற்கு ஆத்திரேலியா, தென் ஆபிரிக்கா, நமீபியா நாடுகளிலுள்ள குகைகளிலும் ஆர்கேனைட்டு காணப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்கேனைட்டு&oldid=2956845" இலிருந்து மீள்விக்கப்பட்டது