ஆர்கே கண்ணா டென்னிஸ் வளாகம்

ஆர்கே கண்ணா டென்னிஸ் வளாகம் (R.K. Khanna Tennis complex)புதுதில்லியில் அமைந்துள்ள ஓர் டென்னிசு விளையாட்டரங்கமாகும்.1970ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் இவ்வளாகம் 1982ஆம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் போது டென்னிசு போட்டிகள் நிகழிடமாக விளங்கியது.2010 பொதுநலவாய விளையாட்டுக்களுக்காக ரூ.65 கோடி செலவில் 11,500 ச.மீ பரப்பில் முற்றிலும் சீரமைக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய விளையாட்டுக்களில் டென்னிசு ஓர் போட்டியாக 2010 தில்லி விளையாட்டுகளின் போதுதான் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

வளாகத்தின் மத்திய ஆடுகளம்

ஓர் மைய விளையாட்டுக்களம், ஓர் காட்சிக் களம், ஆறு போட்டிக் களங்கள் மற்றும் ஆறு பயிற்சிக் களங்கள் என இவ்வளாகத்தில் 14 டென்னிசுக் களங்கள் உள்ளன.

மேலும் காண்க

தொகு

வெளியிணைப்புகள்

தொகு