ஆர்க் டே ரியோம்ப்

ஆர்க் டே ரியோம்ப் (Arc de Triomphe de l'Étoile) என்பது பாரிசிலிலுள்ள மிகவும் புகழ்பெற்ற நினைவுச்சின்னங்களில் ஒன்று. இது "பலஸ் சாள்ஸ் டே கேல்" எனுமிடத்தின் மத்தியில் உள்ளது.[3] ஆர்க் டே ரியோம்ப் ("வெற்றி வளைவு" என்பது பொருள்) பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள், நெப்போலியப் போர்கள் ஆகிய போர்களில் பிரான்சுக்காக சண்டையிட்டு இறந்தவர்களை புகழ்வதற்காக, இதன் வெளிப்புற மேற்பரப்பில் முழு பிரான்சிய வெற்றியாளர்கள் மற்றும் தளபதிகளின் பெயர்கள் பதிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. இதன் கீழே முதலாம் உலகப்போரின் "அறியப்படாத போர் வீரன்" கல்லறை உள்ளது. நினைவுச்சின்னம் தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 10:30 மணி வரை திறந்திருக்கும்.[4]

ஆர்க் டே ரியோம்ப்
Arc de Triomphe
இரவில் ஆர்க் டே ரியோம்ப்
ஆர்க் டே ரியோம்ப் is located in Paris
ஆர்க் டே ரியோம்ப்
Paris இல் அமைவிடம்
மாற்றுப் பெயர்கள்Arc de Triomphe de l'Étoile
பொதுவான தகவல்கள்
வகைவெற்றி வளைவு
கட்டிடக்கலை பாணிபுதுச்செவ்வியல்வாதம்
இடம்பலஸ் சாலஸ் டே குலே
கட்டுமான ஆரம்பம்15 ஆகத்து 1806[1]
துவக்கம்29 சூலை 1836[2]
உயரம்50 m (164 அடி)
பரிமாணங்கள்
பிற பரிமாணங்கள்அகலம்: 45 m (148 அடி)
ஆழம்: 22 m (72 அடி)
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)ஜீன் சல்கிறின், லூயிஸ் டே தூரி

உசாத்துணை

தொகு
  1. Raymond, Gino (30 October 2008). Historical dictionary of France. Scarecrow Press. p. 9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8108-5095-8. பார்க்கப்பட்ட நாள் 28 July 2011.
  2. Fleischmann, Hector (1914). An unknown son of Napoleon. John Lane company. p. 204. பார்க்கப்பட்ட நாள் 28 July 2011.
  3. The étoile ("star") is formed by twelve radiating avenues.
  4. "Arc De Triomphe". Archived from the original on 12 பிப்ரவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 12 February 2023. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unfit URL (link)

வெளியிணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்க்_டே_ரியோம்ப்&oldid=3658696" இலிருந்து மீள்விக்கப்பட்டது